சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

‘கிரண்’ என்ற 24 மணி நேர இலவச மனநல மறுவாழ்வு உதவி எண் (1800-599-0019): மத்திய அமைச்சர் திரு.தவார்சந்த் கெலாட் தொடக்கம்

Posted On: 07 SEP 2020 3:19PM by PIB Chennai

‘‘கிரண்’’  என்ற 24 மணி நேர, இலவச மனநல மறுவாழ்வு உதவி எண்-(1800-599-0019), மத்திய  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு.தவார்சந்த் கெலாட்  இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று நேரத்தில், மனநலம் பாதிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதை முன்னிட்டு, அவர்களுக்கு உதவ இந்த உதவி எண்ணை சமூக நீதி அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை  தொடங்கியுள்ளது. இந்த உதவி எண், சிறு புத்தகம் மற்றும் போஸ்டர்களையும் அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட் வெளியிட்டார். உதவி எண் செயல்படும் விதத்தையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத் துறை செயலாளர் திருமதி. சகுந்தலா டி. காப்லின் கலந்து கொண்டார். இந்த உதவி எண் செயல்படும் விதம் குறித்து இணை செயலாளர் திரு. பிரபோத் சேத் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட், ‘‘விரைவான பரிசோதனை, முதல் உதவி, உளவியல் உதவி, மனநலம், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேம்படுத்துல் போன்றவற்றை வழங்கும் நோக்கத்துடன், ‘கிரண்உதவி எண் மனநல மறுவாழ்வு சேவைகளை அளிக்கும் என்று தெரிவித்தார்.

மனஅழுத்தம், பதற்றம், மனசோர்வு, பீதியில் தாக்குதல் நடத்துதல், தற்கொலை எண்ணங்கள், கொரோனா தொற்று சூழலால்  ஏற்பட்ட மனநல பிரச்னைகள் போன்ற பிரச்னைகளுக்கு இந்த உதவி எண் சேவை அளிக்கும்.

தனிநபர்கள், குடும்பங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு, பெற்றோர் சங்கங்கள், மறுவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் நாடுமுழுவதும் உதவி தேவைப்படுவோருக்கு இந்த உதவி எண் மூலம் 13 மொழிகளில் முதல்கட்ட ஆலோசனை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651963

***********(Release ID: 1652038) Visitor Counter : 6509