அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி மீது இருக்கும் குறைந்த அளவு ஓசோன் மக்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்

Posted On: 05 SEP 2020 7:15PM by PIB Chennai

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் இருக்கும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஓசோனின் அளவு நாட்டின் இதர நகர்ப்புறங்களை விட குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

இது மக்களின் உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி அமைப்பான ஆரியபட்டா அவதானிப்பு அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

 

அவர்களின் இந்த ஆய்வு வளி மண்டல மாசு ஆய்வு (Atmospheric Pollution Research) எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

 

ஆரியபட்டா அவதானிப்பு அறிவியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி டாக்டர் உமேஷ் சந்திர தும்காவின் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651641


(Release ID: 1651910) Visitor Counter : 161