பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
இரண்டு நாள் 'தேசியப் பழங்குடி ஆராய்ச்சி மாநாடு' மெய்நிகர் முறையில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தால் நடத்தப்பட்டது
Posted On:
05 SEP 2020 2:28PM by PIB Chennai
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தியப் பொது நிர்வாக நிறுவனம் (IIPA) ஆகியவை இணைந்து இரண்டு நாள் தேசியப் பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை மெய்நிகர் முறையில் 3 மற்றும் 4 செப்டம்பர் அன்று நடத்தின.
நிகழ்ச்சியில் பேசிய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, கிராம அளவிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்துப் பேசினார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து முன்னதாகப் பேசிய திரு முண்டா, பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான மானியங்களின் கீழ் 26 பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் நிதி உதவியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடு முழுவதுமுள்ள முன்னணி அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து தரமான ஆராய்ச்சியிலும் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசியப் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்துடன் (IIPA) இணைந்து இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் தில்லி வளாகத்தில் தேசியப் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லியில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651544
***
(Release ID: 1651618)
Visitor Counter : 208