பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்குவுடன் மாஸ்கோவில் அன்பான மற்றும் நட்புரீதியான சந்திப்பு;

Posted On: 03 SEP 2020 9:53PM by PIB Chennai

ரஷ்ய கூட்டமைப்பின் வெற்றி தினத்தை நினைவுகூரும் 75 வது ஆண்டு விழாவில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட தூதுக்குழுவினருடன் மாஸ்கோ சென்றுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர்,ஷ்ய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்குவை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று , சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்திய மற்றும் ரஷ்ய கடற்படையினரின் இந்திர கடற்படை பயிற்சிகள் நடைபெற இருக்கும் தருணத்தில் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

******

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1651150

 


(Release ID: 1651277) Visitor Counter : 237
Read this release in: English , Urdu , Hindi , Manipuri