சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலை தொகுப்பு இணைப்புத் திட்டங்களால் கட்சிரோலியின் முகத்தோற்றம் முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Posted On: 30 AUG 2020 2:55PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காணொலி இணைப்பு வழியாக, மூன்று முக்கியமான பாலங்கள் மற்றும் இரண்டு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இன்று தொடங்கிவைத்தார் . வைங்கங்கா, பாண்டியா, பெரிகோட்டா மற்றும் பெரிமிலி நதிகளுக்கு குறுக்கே மேலும் நான்கு பெரிய பாலங்களின் கட்டுமான திட்டங்களுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். கட்சிரோலி மாவட்டத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாட்டை மேம்படுத்த இந்தத் திட்டங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் வருமாறு::

  • ரூ .168 கோடி செலவில், நிஜாமாபாத் - ஜகதால்பூர் சாலையில் (என்.எச் 63) பிரணாஹிதா ஆற்றின் குறுக்கே 855 மீட்டர் பெரிய பாலம் .
  • ரூ .248 கோடி செலவில், நிஜாமாபாத் - ஜகதால்பூர் சாலையில் (என்.எச் 63) பதகுடம் அருகே இந்திராவதி ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் உயரமான பாலம்.
  • பெஜுர்பள்ளி - அஹேரி சாலையில் லங்காச்சென் அருகே 30 மீட்டர் உயரமான பாலம்,
  • வாத்ரா மற்றும் மொயாபின்பேட்டா இடையே பெஜுர்பள்ளி-அஹேரி சாலையின் (எஸ்.எச் 275) மேம்பாடு திட்டம்
  • கராஞ்சி - புஸ்டோலா சாலை மேம்பாடு திட்டம்

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.நிதின் கட்கரி, இந்த முக்கிய பாலங்களின் கட்டுமானப் பணிகள் மூலம், மகாராஷ்டிரா-சத்தீஸ்கர்-தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. "இது மகாராஷ்டிராவில் நான் அமைச்சராக இருந்தபோது கனவு கண்ட திட்டம், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகி உள்ளது.” என்றார், அவர்.

 

கட்சிரோலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 54 கி.மீ-ல் இருந்து 647 கி.மீ-ஆக தமது பதவிக்காலத்தில் உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் திரு.கட்கரி தெரிவித்தார். கட்சிரோலி மாவட்டத்திற்கு ரூ .1,740 கோடி செலவில் 541 கி.மீ நீளமுள்ள 44 சாலை திட்டங்களுக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

****


(Release ID: 1651212) Visitor Counter : 219