ஜல்சக்தி அமைச்சகம்
ஊரகப்பகுதி நீர் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய சேவை வழங்குவோருக்கான பாதுகாப்பு முன்தடுப்பு குறித்த அறிவுரைகள் வெளியீடு
Posted On:
02 SEP 2020 6:32PM by PIB Chennai
ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை, ஊரகப்பகுதிகளில் நீர் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கான ( வாஷ்) சேவை வழங்குவோருக்கு பாதுகாப்பு முன்தடுப்புகள் குறித்த அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று, சுவாசத் துளிகள் அல்லது தொடர்பு மூலம் பரவுகிறது என்பது தற்போது ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளது. அழுக்கடைந்த, கறை படிந்த கைகள் மூலம் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும்போது, தொற்று பரவுகிறது. அழுக்கு கைகள் மூலம், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அது பரவுகிறது. இது மறைமுகமான பரவலுக்கு காரணமாகிறது. உடல் ரீதியாக சமூக இடைவெளியைப் பராமரிப்பதுடன், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல், தொற்று பரவாமல் தடுக்கவும், குறைக்கவுமான செயல்திறன் மிக்க நடைமுறையாகும். உரிய விநியோகங்களுக்கான அணுகுமுறை உள்பட பல்முனை உத்திகள் மூலம் பரவலைத் தடுக்க முடியும்.
இத்தகைய சூழலில், கூடுதல் ஆலோசனைகளை குடிநீர் மற்றும் நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீர் சேவையை உறுதி செய்யுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கை கழுவும் உபகரணத்துக்கு ஏற்பாடு செய்தல்
தனித்திருக்கும், தனிமைப்படுத்தும் மையங்களில் குடிநீருக்கு உறுதி செய்தல்
சுகாதார மையங்கள், வசதிகளுக்கு முன்னுரிமை
தண்ணீரை வழங்கும் போது இடைவெளியைக் கடைப்பிடித்தல்
தண்ணீர் விநியோக நேரத்தை அதிகரித்தல்
தண்ணீர் விநியோக சேவை வழங்குவோருக்கு தனிநபர் பாதுகாப்பை வழங்குதல்
குறைகளுக்குத் தீர்வு காணுதல்
பள்ளிகள்/ அங்கன்வாடிகளில் ரெட்ரோபிட்டிங் வசதிக்கு முன்னுரிமை
பிளம்பர்கள், மின்னாளுநர்கள், மோட்டார் பழுது நீக்குபவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சமுதாய அளவிலான சேவை வழங்குவோருக்கு குறிப்பாக முன்தடுப்பு நடவடிக்கைகள் பரிந்துரைப்படுகின்றன. குறிப்பாக, வேலைகளுக்காக வீட்டிலிருந்து கிளம்பும் போதும், வேலை பார்க்கும் போதும், வீட்டுக்கு திரும்பும் போதும் இந்த சுகாதார அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் அறிவுரைகள் குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் விரிவான விளம்பரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யவும் :https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650710
-------
(Release ID: 1651014)
Visitor Counter : 229