மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவு
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2020 5:26PM by PIB Chennai
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செயலிகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில கைபேசி செயலிகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து வந்த புகார்கள் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் மையமும் இந்த செயலிகளை தடைசெய்ய பரிந்துரைத்தாகவும் அரசு கூறியுள்ளது
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650669
***
MBS/GB
(வெளியீட்டு அடையாள எண்: 1650839)
வருகையாளர் எண்ணிக்கை : 706