நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2.8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சுமார் 95 சதவீதத்தினருக்கு இலவசமாக உணவு தானிய விநியோகம்

Posted On: 01 SEP 2020 7:22PM by PIB Chennai

மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மதிப்பீட்டின்படி, மொத்தம் 2.8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 95 சதவீதத்தினருக்கு இலவசமாக உணவு தானியங்களை விநியோகித்துள்ளது. 2020 ஆகஸ்ட் 31-ந்தேதி வரை தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 2.65 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தமக்கு அளிக்கப்பட்ட உணவு தானியங்களில் 80 சதவீதத்தை பயன்படுத்தி உள்ளன.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650442

----
 

 



(Release ID: 1650613) Visitor Counter : 199