பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படையின் மூலதனப் பொருட்கள் பிரிவு தலைவராக வைஸ் அட்மிரல் எஸ்.ஆர்.சர்மா பொறுப்பேற்பு

Posted On: 01 SEP 2020 4:18PM by PIB Chennai

இந்திய கடற்படையின் மூலதனப் பொருட்கள் பிரிவு தலைவராக, வைஸ் அட்மிரல் எஸ்.ஆர்.சர்மா இன்று பொறுப்பேற்றார். இந்தப் பிரிவில் தலைவராக இருந்த வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பாபி ஓய்வு பெற்றதையடுத்து, எஸ்.ஆர்.ச்மா இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.  இவர் பெங்களூர் ஐஐஎஸ்சி கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.

இந்திய கடற்படையில் கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், ஐஎன்எஸ் விந்தியகிரி, ராணா, கிருஷ்ணா மற்றும் மைசூர் ஆகிய போர்க் கப்பல்களில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கடற்படை தலைமையகத்தில் ஐ.டி மூலதனப் பொருட்கள் பிரிவில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

சர்மாவின் சிறந்த சேவையை பாராட்டி, அவருக்கு அதிவிசிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விசிஸ்ட் சேவா பதக்கம், லெப்டினன்ட் வி.கே.ஜெயின் தங்க பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

கடற்படையின் பராமரிப்பு மேலாண்மை தொடர்பான பணிகளுக்கு இவர் பொறுப்பு வகிப்பார். போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆயுதங்கள், சென்சார் கருவிகள், ஐடி சாதனங்களை சர்மாவின் கீழ் இயங்கும் மூலதனப் பொருட்கள் பிரிவு வழங்கும். 

***



(Release ID: 1650402) Visitor Counter : 164