நிதி அமைச்சகம்

நடப்பு 2020-21 நிதியாண்டில் மத்திய அரசின் ஜூலை மாதம் வரையிலான கணக்குகள் பற்றிய மாதாந்திர பரிசீலனை

Posted On: 31 AUG 2020 6:25PM by PIB Chennai

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான, மத்திய அரசின், மாதாந்திரக் கணக்குகள் தொகுக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

 

ஜூலை 2020 வரையிலான காலத்தில், மத்திய அரசின் மொத்த வருவாய் 232860 கோடி ரூபாய். 2020- 21 ஆம் ஆண்டில் இதே காலத்தைய மொத்த வரவினத்துடன் ஒப்பிடுகையில், இது 10.4 சதவீதம் ஆகும். ஜூலை மாதம் 2020 வரையிலான காலத்தில் மொத்த வரி வருவாய் 202788 கோடி ரூபாய்.( நிகர ரூபாய் மையத்திற்கு ) வருவாய் 24614 கோடி ரூபாய். கடன் சாரா மூலதன வரவினம் 545 8 கோடி ரூபாய். இதில் 545 கோடி ரூபாய் கடன் வசூல் மூலம் வரப்பெற்றவை. டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் வழிமுறைகள் மூலம் 3 கோடி ரூபாய் வரப்பெற்றது.

 

இந்தக் காலம் வரையிலான காலத்தில் மத்திய அரசுக்கு வரப்பெற்ற வரி மூலமான வரவினத்திலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 9 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வரிவருவாய்ப் பங்கீடு வழங்கப்பட்டுள்ளது.  இது சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 23 ஆயிரத்து 903 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. மத்திய அரசுக்கு ஏற்பட்ட செலவினம் 10 லட்சத்து 54 ஆயிரத்து 209 கோடி ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 34.65 சதவீதமாக உள்ளது. இதில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 360 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கிலும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 849 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலும் உள்ளவை. மொத்த செலவினத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 584 கோடி ரூபாய், வட்டிக் கணக்கில் அளிக்கப்பட்டது. முக்கியமான பல மானியங்கள் அளிப்பதன் காரணமாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 638 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

****
 


(Release ID: 1650171) Visitor Counter : 271