அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் குவைய நிலை மதிப்பீடு குறித்த புதிய வழி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர் இதனால் மிக முக்கியமான குவைய இயக்கங்கள் எளிதாகும்
Posted On:
31 AUG 2020 1:03PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான இராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் குவைய மதிப்பீட்டுக்கான (quantum state estimation) புதிய வழி ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். மிக எளிமையான குவைய முறையான இரண்டு பரிமாணங்கள் கொண்ட க்யூபிட்டுகள் (“qubits”) அதிக பரிமாணங்கள் கொண்ட க்யூபிட்டுகள் உட்பட அனைத்தையும் குவைய நிலை இன்டர்பெரோகிராபி (‘Quantum State Interferography’) என்ற முறை மூலம் அளவிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர். மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் குவெஸ்ட் (QuEST) நெட்வொர்க் திட்டத்தின் ஓரளவு ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சிப்பணி ஃபிசிகல் ரெவியூ லெட்டர்ஸ் (Physical Review Letters) என்ற இதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1649962
(Release ID: 1650044)
Visitor Counter : 279