ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நியாயமான விலை மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுவதற்காக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தை அதன் 23-வது நிறுவன நாளில் மத்திய அமைச்சர்கள் திரு. கவுடா மற்றும் திரு. மண்டாவியா பாராட்டினர்

Posted On: 29 AUG 2020 4:23PM by PIB Chennai

தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) நிறுவன நாளில், "அனைத்து மக்களுக்கும் கட்டுபாடியாகக்கூடிய சுகாதாரச் சேவை அமைப்பு என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் லட்சியத்தைப் பூர்த்தி செய்வதை நோக்கி, உயிர் காக்கும் மருந்துகள் தொடர்ந்து நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய ஓய்வில்லாமல் உழைப்பதற்காக'" NPPA-வை பாராட்டினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் NPPA ஆற்றும் முக்கிய பங்கை அங்கீகரித்த அமைச்சர், "கோவிட்-19-இன் போது மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்த்த ஆணையம், செயல்மிகு கட்டுப்பாட்டு அறையின் மூலம் பொதுமக்களின் குறைகளையும் திறமையாகத் தீர்த்து வைத்தது. மேலும், கோவிட்டின் போது 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியாவின் மருந்துகளை அனுப்பி வைத்து அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்தது," என்றார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-08-29at4.19.18PM632C.jpeg

 

NPPA ஆற்றும் முக்கியமான பங்கை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), கப்பல் அமைச்சகம் மற்றும் இணை அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம், திரு. மன்சுக் மண்டாவியா சுட்டி ஒன்றில் அங்கீகரித்தார். "அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்த NPPA உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் 29 இந்தியாவுக்கு ஒரு முக்கியமான தினமாகும். பிரதமரின் லட்சியமான ஆரோக்கியமான தேசத்தை இலக்காகக் கொண்டு தொய்வில்லாமல் உழைக்கும் NPPA , கோடிக்கணக்கான ரூபாய்களை பொதுமக்கள் சேமிப்பதற்கு உதவுகிறது," என்று அவர் கூறினார். தனது பணிகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை NPPA பயன்படுத்துவதைக் குறிப்பிட்ட இணை அமைச்சர், 1. மருந்துகளின் விலைகளைக் கண்காணிப்பதற்கான பார்மா சஹி தாம் செயலி மூலமும், 2. பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு உதவும் பார்மா ஜன் சமாதன் மூலமும், 3. மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் தகவல்களை சேகரிக்கும் பார்மா தகவல் வங்கியின் மூலமும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்துக்கு NPPA வலுவூட்டுவதாகக் கூறினார்.

 

 

 

***



(Release ID: 1649558) Visitor Counter : 174