ஜவுளித்துறை அமைச்சகம்
பிளாஸ்டிக் பைகளை படிப்படியாக ரத்து செய்வதை நோக்கமாக கொண்ட புதுமையான ஆலோசனைகளை வெளிக்கொணர மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஜவுளி துறையின் போட்டி 2019-ன் பரிசளிப்பு நிகழ்ச்சி
Posted On:
27 AUG 2020 6:28PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான சுற்றுச் சூழலுக்கு உகந்த, செலவைக் குறைப்பதற்கான மாற்று யோசனைகளை செயல்படுத்துவதற்கு, இந்தியாவின் புதுமையான சிந்தனைகள் நிறுவனமயமாக்கப்படுவது அவசியம் எனக் கூறினார். மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஜவுளி பிரம்மாண்ட சவால் 2019 என்னும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், இதில் பங்கேற்றவர்கள் அளித்த புதுமையான ஆலோசனைகள், இந்தியாவின் மரபு அனைவருக்கும் சமத்துவம் என்ற நிலைக்கு மாறிவருவதை குறிப்பதாகத் தெரிவித்தார்.
ஜவுளி எந்திர தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி வலியுறுத்தினார். குறிப்பாக சணல் துறையில், புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரம்மாண்டமான போட்டியை, தேசிய சணல் வாரியம், தொழில் மற்றும் தொழில் வர்த்தக மேம்பாட்டு துறையின் ஸ்டார்ட் அப் குழு ஆகியவற்றின் தீவிர ஆதரவுடன், மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்தியது.
இந்தப் போட்டியில் மொத்தம் 67 பதிவுகள் வந்திருந்தன. அதில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று குறித்த 2 யோசனைகள், பல முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று தொடர்பான ஒரு யோசனைக்கு அமைச்சகத்தின் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
******
(Release ID: 1649170)
Visitor Counter : 227