பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு தொழில்துறை வெபினாரில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகள் பற்றி விளக்கினார்

Posted On: 27 AUG 2020 7:10PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா பாதுகாப்பு தொழில் குறித்த காணொலிக் கருத்தரங்கில், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ் நாத் சிங் பட்டியலிட்டார். இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சொசைட்டி, இந்திய தொழில், வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு பிக்கி, பாதுகாப்பு உற்பத்தி துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வெபினாருக்கு ஏற்பாடு செய்திருந்தன.

உடனடி மாற்றம் தேவைப்படும் பாதுகாப்புத் துறை ஏற்கனவே, மேக் இன் இந்தியா இயக்கத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய துறைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏற்றுமதியில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஐந்து பில்லியன் டாலர் ( ரூ.35000 கோடி) என்ற இலக்கு  எட்டவேண்டுமென  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை நோக்கி, வரைவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அது பொது மக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டு, அது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறையில் 101 எதிர்மறை பட்டியல் பொருட்கள் பற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்கியதாகக் குறிப்பிட்டார். ‘’ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இந்தப் பொருட்கள் வெளியிலிருந்து வாங்கப்படமாட்டாது. தற்போது நடைமுறையில் உள்ள இந்தப் பட்டியலை மாற்றியமைக்கும் ஆற்றல் பாதுகாப்பு துறைக்கு உள்ளது. இந்த 101 பொருட்கள் பட்டியலில் , சிறு பொருட்கள் மட்டுமல்லாமல், போருக்குத் தேவையான நடைமுறைகள், ஒருங்கிணைந்த தளங்கள், போர் வாகனங்கள் ஆகியவையும் உள்ளன. இது ஒரு ஆரம்பம். வருங்காலத்தில், ரூ.1.40 லட்சம் கோடி பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்’’ என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு துறையில் தன்னிறைவை எட்டும் வகையில் அரசு பல்வேறு துணிச்சலான கொள்கை சீர்திருத்தங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். பாதுகாப்பு துறையின் தானியங்கி வழியில் வெளிநாட்டு நேரடி மூலதன வரம்பை 74 சதவீதமாக அதிகரிப்பது, .பி. மற்றும் தமிழகத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தளங்களை நிறுவுவது, முதலீடுகளை ஊக்குவிக்க கூட்டாண்மை மாதிரியை மேற்கொள்வது, தொழில்துறை உரிமத்தை தாராளமாக்குவது, முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாதுகாப்பு, முதலீட்டாளர் பிரிவை ஏற்படுத்துவது ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும்.

கேள்வி-பதில் அமர்வுக்குப் பின்னர், பிரதமர் திரு. நரேந்திர மோடி இதில் உரையாற்றினார்.

******



(Release ID: 1649166) Visitor Counter : 265