புவி அறிவியல் அமைச்சகம்

அகில இந்திய தாக்கத்தின் அடிப்படையிலான வானிலை எச்சரிக்கை

Posted On: 27 AUG 2020 2:28PM by PIB Chennai

நன்கு தெளிவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி* தென்மேற்கு ஜார்கண்ட் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் இது வடக்கு சத்தீஸ்கர், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் மேற்கு முனை இமயமலை அடிவாரத்திற்கு அருகில் ஓடுகிறது. மற்றும் கிழக்கு முனை அதன் இயல்பான நிலைக்கு தெற்கே ஓடுகிறது . மேற்கு முனை நாளை முதல் தெற்கு நோக்கி நகர்ந்து அதன் இயல்பான நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் நிலைகொண்டிருக்கும், பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையின்      அடிவாரத்திற்கு         அடுத்தடுத்து 4-5 நாட்களுக்கு நகரும்.

♦  கூடுதலாக, அரபிக் கடலில் இருந்து வலுவான தாழ்வு நிலையில்  தென்மேற்கு காற்று மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து கிழக்காக வீசும் காற்று, வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு அதிகமாக இருக்கும்.

இவற்றின் விளைவால், கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் 27 , 28  ஆகிய தேதிகளிலும் மற்றும் சத்திஸ்கர், விதர்பா ஆகியவற்றில் ஆகஸ்ட் 27,2020 தேதியிலும் பரவலான மழையுடன், விட்டுவிட்டு மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

-----


(Release ID: 1648967)