அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

டாக்டர் ஹர்ஷவர்தன்- ‘’ நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பல்வேறு பருவநிலை மாற்ற அபாய நேர்வுகளைத் தீர்மானிக்க, நாடு முழுவதும் பல்நிலை பருவநிலை அணுகுமுறைக்கு வலுவான பருவநிலை அபாய மேலாண்மை வரையறை தேவைப்படும் அதே சமயத்தில், இத்தகைய அபாயங்களால் ஏறபடக்கூடிய இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விரிவான புரிதலையும் வழங்குகிறது’’

Posted On: 26 AUG 2020 7:27PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ’ ‘’ நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பல்வேறு பருவநிலை மாற்ற அபாய நேர்வுகளைத் தீர்மானிக்க, நாடு முழுவதும் பல்நிலை  பருவநிலை அணுகுமுறைக்கு வலுவான பருவநிலை அபாய மேலாண்மை வரையறை தேவைப்படும் அதே சமயத்தில், இத்தகைய அபாயங்களால் ஏறபடக்கூடிய இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விரிவான புரிதலையும் வழங்குகிறது’’என்று கூறியுள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த  ‘’ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்- கொள்கை- பருவநிலை அபாய மேலாண்மைக்கான நடைமுறை இடைமுகம்’’ என்னும் மூன்று நாள் காணொலிக் காட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

‘’ தற்சார்பு இந்தியா என்னும் பிரதமரின் உன்னத அழைப்பை நிறைவேற்றும் ஒரு பகுதியாக, தன்னிறைவு என்னும் தாரகமந்திரத்தை நோக்கிய நமது பயணத்திற்கு, பேரிடர் விரிதிறன் மற்றும் நிலைத்தன்மையுடன் கூடிய  கட்டமைப்புக்கு பருவநிலை தகவமைப்பு திட்டமிடலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது’’ என்று கூறிய அமைச்சர், ‘’ பருவநிலை குறித்த இரண்டு தேசிய இயக்கங்களை செயல்படுத்துவதில்பருவநிலை மாற்றம் குறித்த தேசிய  செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளதுஇந்த இரண்டு இயக்கங்களின் கீழ், சுமார் 200 பல்வேறு அளவிலான திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகின்றது. இதில், 15 சிறப்பான செயல்பாட்டு மையங்கள், 30 பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், சுமார் 100 திட்டங்களை உள்ளடக்கிய 14 கட்டமைப்பு திட்டங்கள், 6 பணிக்குழுக்கள், 25 மாநில பருவநிலை மாற்ற மையங்கள் உள்ளிட்டவை அடங்கும்கடந்த 6 ஆண்டுகளில், உயர் தாக்க சஞ்சிகையின் சுமார் 1500 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.  100-க்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்ப உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த இயக்கங்களின் பகுதியாக சுமார் 50,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுஇந்த இயக்க திட்டங்களில், 1200-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

********


(Release ID: 1648915) Visitor Counter : 185