விவசாயத்துறை அமைச்சகம்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ந்த வெட்டுக்கிளிகள் மற்றும் வெட்டுக்கிளிக் கூட்டங்கள் இல்லை

Posted On: 26 AUG 2020 4:34PM by PIB Chennai

ஏப்ரல் 11, 2020  முதல் ஆகஸ்ட் 25, 2020  வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 2,79,066 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளித் தடுப்பு வட்ட அலுவலகங்கள் (LCO) கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 2,87,374 ஹெக்டேர் பரப்பளவில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மாநில அரசுகளால் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட எந்தப் பகுதியிலும் வளர்ந்த வெட்டுக்கிளிகளோ அல்லது வெட்டுக்கிளி கூட்டங்களோ நேற்று காணப்படவில்லை. இருப்பினும், ராஜஸ்தான், மற்றும் குஜராத் மாநிலங்களில் போதுமான வாகனங்கள் தெளிப்பு உபகரணங்களுடன் கட்டுப்பாட்டுக்கு போதுமான விழிப்புடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்று (26.08.2020), வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வெட்டுக்கிளித் தடுப்பு வட்ட அலுவலகங்களின் (LCO) தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

************


(Release ID: 1648887) Visitor Counter : 140