சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்தியப்பிரதேசத்தில் 11427 கோடி ரூபாய் செலவில் 1,361 கிலோ மீட்டர் தொலைவிலான 45 நெடுஞ்சாலைத் திட்டங்களை திரு.கட்காரி தொடங்கி வைத்தார்; அடிக்கல் நாட்டினார்.
Posted On:
25 AUG 2020 3:42PM by PIB Chennai
மத்தியப்பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத் திட்டங்களை சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, இன்று காணொளி மாநாடு மூலமாக தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த மெய்நிகர் நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர்கள் திரு.தாவர் சந்த் கெலாட், திரு.நரேந்திர சிங் தோமர், மத்திய இணை அமைச்சர்கள், திரு.பிரகலாத் சிங் பட்டேல், திரு.பகத் சிங் குலாஸ்தே, ஜெனரல் (டாக்டர்) விகே சிங் (ஓய்வு) மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1361 கிலோமீட்டர் தொலைவில் 11427 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகளைக் கொண்ட இத்திட்டங்கள், மத்தியப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும், நல்ல தொடர்புகளையும், வசதிகளையும் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற அண்டை மாநிலங்களுக்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து சரக்குப் போக்குவரத்துக்கும், மக்கள் போக்குவரத்துக்கும் இவை பெரிதும் உதவும். இவ்வாறு நல்ல சாலைகள் போடப்படுவதால் எரிசக்தியும், நேரமும் மிச்சமாகும். மாசுபாடும் குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். போகும் வழியில் உள்ள நகரங்கள், நல்ல சாலை வசதி அனுபவத்தை அளிக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.கட்காரி 2014ஆம் ஆண்டு மாநிலத்தில் வெறும் 1186 கிலோமீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 13248 கிலோ மீட்டராக உள்ளது என்று கூறினார். தற்போது மத்தியப்பிரதேசத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
(Release ID: 1648522)
Visitor Counter : 256