பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டி ஓ) பாட்னாவில் உள்ள 500 படுக்கை வசதி கொண்ட கோவிட் நோய் சிகிச்சைக்கான மருத்துவமனை துவக்கம்

Posted On: 24 AUG 2020 6:58PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (டி ஆர் டி ஓ) பாட்னாவில் அமைத்துள்ள, 125 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கை வசதி உட்பட 500 படுக்கை வசதி கொண்ட, கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையை, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.நித்தியானந்த ராய் இன்று துவக்கி வைத்தார். பிஹ்தா-வில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இ எஸ் ஐ சி மருத்துவமனையில், இந்த மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை டி ஆர் டி ஓ தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் அமைத்துள்ள, ஆயிரம் படுக்கை வசதி கொண்ட சர்தார் வல்லபபாய் பட்டேல் மருத்துவமனையைப் போன்றதாக அமைந்துள்ளது.

 

பிரதமரின் குடிமக்களுக்கான உதவி, அவசர கால நிலைமைகளில் நிவாரணம் (பிஎம் சி ஏ ஆர் இ எஸ்) அறக்கட்டளை மூலமாக இந்த மருத்துவமனைக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற இன்னுமொரு மருத்துவமனை முசாஃபர்பூரில் ஏற்படுத்தப்படும்.

 

ஏழு தளங்கள் கொண்ட இ எஸ் ஐ சி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள மின்சாரம், குளிர்சாதன வசதி, நீர், தீயணைப்பு வசதி, டீசல் ஜெனரேட்டர் பேக்கப் வசதி, ஒவ்வொரு படுக்கைக்கும் குழாய் மூலமாக ஆக்ஸிஜன் கிடைக்கும் வசதி, லிஃப்ட்வசதி, சவக்கிடங்கு ஆகிய அனைத்து வசதிகளும் இந்த கோவிட் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அளிக்கப்படும்.

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/PIC1(3)3UWF.jpg



(Release ID: 1648355) Visitor Counter : 250