பாதுகாப்பு அமைச்சகம்

"சுயசார்பு பாரதம்" லட்சியத்தை அடைவதற்குத் தொழில் வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான 108 அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) அடையாளம் காட்டுகிறது.

Posted On: 24 AUG 2020 6:03PM by PIB Chennai

மாண்புமிகு பிரதம மந்திரியின் ”சுயசார்பு பாரதம்” வழங்கிய தெளிவான அழைப்புக்கு பதிலளித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டுப் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இது குறித்து,ப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தூதுக்குழு இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து, இந்தியத் தொழில்துறையால் மட்டுமே வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டுக்காக அடையாளம் காணப்பட்ட 108 அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகள் பற்றி அவருக்கு விளக்கமளித்தது. தொழில்நுட்பங்களின் பட்டியல் இணைப்பு -1 இல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதற்கு பல தொழில்நுட்பங்களை உருவாக்க வழி வகுக்கும்.

 

பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தேவை அடிப்படையில் இந்த அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனைத் தொழில்களுக்கு தனது ஆதரவை வழங்கும். இந்த அமைப்புகளின் அனைத்துத் தேவைகளையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் (R&D), ஆயுதப்படைகள் மற்றும் பிற பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் அபிவிருத்தி ஒப்பந்தங்கள் அல்லது பொருத்தமான இந்தியத் தொழிலில் உற்பத்தி ஆணைகள் மூலம் பூர்த்தி செய்யலாம். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) முக்கியமான மற்றும் மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும்.

 

பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அதன் அமைப்புகளை உணர்ந்து கொள்வதற்காக தொழில்துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளது. முக்கிய ஆயுத அமைப்புகளின் வளர்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (DRDO) ஒத்துழைப்பது, இந்தியத் தொழில் தாமாக சொந்தமாக அமைப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு நிலைக்கு முதிர்ச்சியடைந்துள்ளது. இந்தியத் தொழில் ஒரு ”பொருள்களின் தேவையை  கட்டமைத்தலில்(Build to print) கூட்டாளரிடமிருந்து ‘பொருள்களைத் தனித்தன்மையாக உருவாக்குவதில் “(Build to specification) கூட்டாளராக முன்னேறியுள்ளது.

 

பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கான (DRDO) தற்போதைய தொழில்தளம் 1800 குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களையும், பொதுத்துறைப் பாதுகாப்புத் துறைகள், பீரங்கித் தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான தொழில்களையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏற்கனவே இந்தியத் தொழிற்துறையை மேம்பாடு மற்றும் உற்பத்திக் கூட்டாளர்கள் (DcPP) என ஈடுபடுத்த பல்வேறு கொள்கைகள் மூலம் அதன் தொழில்நுட்பத்தை பெயரளவு செலவில் தொழிலுக்கு வழங்குதல் மற்றும் அதன் காப்புரிமைகளுக்கு இலவச அணுகலை வழங்குதல் ஆகிய முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளது.

 

இந்த முயற்சி வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பாதுகாப்பு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் தொழில்துறைகளை ஆதரிப்பதோடு, சுயசார்பு பாரதத்திற்கு” பெரிய அளவில் பங்களிக்க உதவும்.

 

*******


(Release ID: 1648276) Visitor Counter : 364