நிதி அமைச்சகம்

இந்திய அரசும் ஏஐஐபி-யும் மும்பையில் புறநகர் ரெயில்வே அமைப்பில் நெட்வொர்க் திறன், சேவைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 24 AUG 2020 5:19PM by PIB Chennai

இந்திய அரசு, மகாராஷ்டிரா மாநில அரசு, மும்பை ரெயில்வே விகாஸ் கழகம் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி  (AIIB) ஆகியன இன்று மும்பையில் புறநகர் ரெயில்வே அமைப்பில் நெட்வொர்க் திறன், சேவைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மும்பை நகர்ப்புறப் போக்குவரத்துச் செயல்திட்டம்-III  என்ற கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0013Y7T.jpg

இந்தத் திட்டமானது இந்தப் பிராந்தியத்தில் பயண நேரத்தைக் குறைத்தல், பயணிகளுக்கு ஏற்படும் விபத்துகளைக் குறைத்தல் ஆகியவற்றுடன் கட்டமைப்புத் திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்தத் திட்டத்தால் பயன் பெறக் கூடிய முதன்மைப் பயனாளிகளில் 22 சதவீத பெண் பயணிகள் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுமேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரமான சேவைகளின் பலன்களை இந்தப் பெண் பயணிகள் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பு 997 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்இதில் 500 மில்லியன் அமெரிக்க டாலரை ஏஐஐபி நிதியாக வழங்கும்மகாராஷ்டிரா மாநில அரசு 310 மில்லியன் அமெரிக்க டாலரையும், ரெயில்வே அமைச்சகம் 187 மில்லியன் அமெரிக்க டாலரையும் வழங்கும்ஏஐஐபி வழங்குகின்ற 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தவணையை ஐந்தாண்டுக் காலத்திற்குத் திருப்பிச் செலுத்த தேவையில்லை.    கடனுடைய முதிர்வுக் காலம் 30 ஆண்டுகள் ஆகும்.


(Release ID: 1648272) Visitor Counter : 245