ரெயில்வே அமைச்சகம்

மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனைய ரயில் நிலையம் மறு சீரமைப்பு மேம்பாடு

Posted On: 24 AUG 2020 3:14PM by PIB Chennai

மும்பை சத்திரபதி மகாராஜ் முனைய ரயில் நிலையத்தை பொதுத்துறை தனியார் கூட்டு முயற்சியில்சீரமைத்து மேம்படுத்த பொதுத்துறை தனியார் கூட்டு மதிப்பீட்டுக் குழுவின் பூர்வாங்க அனுமதி பெறப்பட்டதையடுத்து, இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம்தகுதி வேண்டுகோள் அறிவிப்பை 20.08.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த ஆவணம் http://irsdc.enivida.com/என்ற தளத்தில் கிடைக்கும். ஏலத்துக்கு முந்தைய கூட்டம் 22.09.2020 அன்று நடைபெறும். விண்ணப்பத்துக்கான தேதி 22.10.2020.

தகுதி அளவுகோள்களைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட நடைமுறைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்தகுதி வேண்டுகோள், கருத்துரு தகுதி என இரண்டு கட்டமாக நடைபெறும் ஏல நடைமுறை மேற்கொள்ளப்படும். தகுதிக் கருத்துரு மட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஏலதாரர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். ரயில் நிலையத்தைச் சுற்றிலும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்படும். குறிப்பிட்ட மனைகளில், குடியிருப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு 99 ஆண்டு குத்தகை வழங்கப்படும். மேலும், ரயில் நிலையத்தைப் பராமரித்து, இயக்க 60 ஆண்டு சலுகை அடிப்படையில் அனுமதிக்கப்படும். வணிக ரீதியில் இயக்கம் துவங்கியதும், வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணம், சலுகைதாரருக்கு தொடர் வருவாய் அளிக்கும் ஆதாரமாக இருக்கும்.

இதற்கான திட்டமிடுதலை பிரான்சை சேர்ந்த ஆரெப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அவ்வப்போது இதற்கான ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்டதுரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் நிதி மற்றும் தற்செயல் செலவு உள்ளிட்ட மேம்பாட்டுச் செலவு (கட்டாய செலவு) ரூ.1642 கோடி. மறுசீரமைப்புக்கான முதலீட்டு வாய்ப்பு டிபிஎப்ஓடி( வடிவமைத்து, கட்டி, நிதி ஒதுக்கி, இயக்கி, மாற்றுதல்) அடிப்படையில் அமையும்.

*****



(Release ID: 1648265) Visitor Counter : 174