விவசாயத்துறை அமைச்சகம்

இதுவரை 10 மாநிலங்களில் 5.66 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன


ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தேவையான பணியாளர்கள், தெளிப்பு வாகனங்களுடன் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

Posted On: 23 AUG 2020 4:06PM by PIB Chennai

2020 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களில், உள்ளூர் வட்டார அலுவலகங்களால் (எல்சிஓ) 2,78,716 ஹெக்டேர் பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஆகஸ்ட் 22 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், அரியானா, உத்தராகண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில், 2,87,374 ஹெக்டேர் பரப்பில் மாநில அரசுகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்சால்மர், ஜோத்பூர், பிக்கானிர் ஆகிய 3 மாவட்டங்களில், 4 இடங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், எல்சிஓ-க்களால் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரு மாநிலங்களிலும், தேவையான பணியாளர்கள், தெளிப்பு வாகனங்களுடன் கட்டுப்பாட்டுக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில், குறிப்பிட்ட அளவுக்கு வெட்டுக்கிளிகளால் பயிர்ச்சேதம் இருந்ததாக தகவல் இல்லை. இருப்பினும், ராஜஸ்தானில், சில மாவட்டங்களில், சிறு அளவுக்குப் பயிர்ச் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்சால்மர், ஜோத்பூர், பிக்கானிர் ஆகிய 3 மாவட்டங்களிலும், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திலும்  இன்று( @3.08.2020) வெட்டுக்கிளிகள் நடமாட்டம் தீவிரமாகக் காணப்படுகிறது.

உணவு மற்றும் விவசாய அமைப்புகளின் 2020 ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட வெட்டுக்கிளி நிலவரப்படி, ஆப்பிரிக்காவின் ஹாம் பகுதியில் அதிகமாக இருந்தது. ஏமனில் பெய்த பெருமழை காரணமாக, வெட்டுக்கிளிகள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் வெட்டுக்கிளிகள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றன.

தெற்கு-மேற்கு ஆசிய நாடுளின் (ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், பாகிஸ்தான்) பாலைவன வெட்டுக்கிளி குறித்த வாராந்திர மெய்நிகர் கூட்டத்தை உணவு மற்றும் விவசாய அமைப்பு எப்ஏஓ ஏற்பாடு செய்து வருகிறது. தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் தொழில்நுட்ப அதிகாரிகளின் 22 மெய்நிகர் கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன.

-------------------------------------------------------------------------------------------------

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/100PWA2.jpg

 

 

***



(Release ID: 1648074) Visitor Counter : 131