ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கரீப் பருவத்துக்காக பாக்ட் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது எம் ஓ பி சரக்கு (27000 மெட்ரிக் டன்) தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த பருவத்தில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Posted On:
22 AUG 2020 5:15PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் உற்சாகமூட்டும் செயல்திறனை மத்திய ரசாயனங்கள் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் (FACT) காட்டியுள்ளது. கரீப் பருவத்துக்காக பாக்ட் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது ம்யூரியேட் ஆப் பொட்டாஷ் (MOP) சரக்கு (27000 மெட்ரிக் டன்) தூத்துக்குடி துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. சரக்கை இறக்கும் பணி நடந்து வருகிறது.
எம் ஓ பி மற்றும் FACT-இன் முதன்மைப் பொருளான பாக்டம்போஸ் (என் பி 20:20:013) ஆகியவற்றின் உரக் கலவை தென்னிந்திய விவசாயிகளால் விரும்பப்படுகிறது. முன்னதாக, ஒரு எம் ஓ பி மற்றும் ஒரு என் பி கே கலவை சரக்குகளை ஜுன்-ஜுலை மாதங்களில் நிறுவனம் இறக்குமதி செய்தது.
கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து, தனது செயல்பாடுகளை நிறுவனம் மேம்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது. ஓரளவுக்கு நல்ல மழை விவசாயத்தை ஊக்கப்படுத்தியுள்ள சமயத்தில், இந்த பருவத்தில் விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
***
(Release ID: 1647917)
Visitor Counter : 142