ஜல்சக்தி அமைச்சகம்

அருணாச்சல பிரதேசம் 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும்.

Posted On: 22 AUG 2020 4:46PM by PIB Chennai

நடப்புப் பருவமழைக் காலத்தில் அருணாச்சலப்பிரதேசம் மிக அதிக அளவு மழை பெற்றுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு, இடி மின்னலுடன் கூடிய மழை, நிலச்சரிவு, நில அரிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களின் காரணமாக, நிலப்பரப்பில் உள்ள குடிநீர் ஆதாரங்களைச் சார்ந்திருந்த குடிநீர் வழங்கும் அமைப்புகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கு சியாங் மாவட்டத்தில்,21 ஆயிரத்து 287 பேர் மக்கள்தொகை கொண்ட 19 கிராமங்கள் கொண்ட பிலாட் வட்டம், ஓவன் சில்லே வட்டம், ரக்சின் தலைமையகம் ஆகிய இடங்களுக்குக் குடிநீர் வழங்கும் லேடம் பல்கிராமக் குடிநீர்த் திட்டம், இந்த இடங்களில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தை விட 1500 அடி உயரத்திலும், மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய தெருவின் இறுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், உள்ள இப்பணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. முக்கிய குழாய் இணைப்பு (டிஐ 250 மில்லி மீட்டர் விட்டம்), நதிகள் கடக்கும் பல இடங்களில் சேதமடைந்துள்ள.

 

அருணாச்சலப்பிரதேச அரசு, இந்த மிஷனின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2023ஆம் ஆண்டுக்குள் நூறு சதவிகிதம் குடிநீர்க் குழாய் இணைப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001JBDA.jpg https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002K1HA.jpg

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image003Z4US.jpg

**************************



(Release ID: 1647914) Visitor Counter : 96