ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம் -சமூக பங்கேற்பு மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறை.
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2020 5:34PM by PIB Chennai
‘தண்ணீரை அதிகரிக்க முடியாது, ஆனால் அதை நிர்வகிக்க மட்டுமே முடியும் ’- இந்த அறிவுப்பூர்வமான வரிகளை வழங்கும்போது ராம்தாஸின் முகம் ஒரு கட்டுப்பாடான ஞானியின் தோற்றத்தை வெளிப்படுத்தியது. புனே மாவட்டத்தின் நீர்த்தட்டுப்பாடு பகுதியின் துணைத்தலைவர் என்பதால், தனது மக்கள் துன்பப்படுவதையும், ஒவ்வொரு துளி நீருக்கும் போராடுவதையும் பார்த்து இந்த ஞானத்தைப் பெற்றுள்ளார்.
சுமார் 40 வீடுகளைக் கொண்ட புனேவின் உகலேவாடி கிராமத்திலிருந்து 927 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான வாழ்விடமான போஜனேவடியில் வசிப்பவர் ராம்தாஸ். தண்ணீர் எடுப்பதற்காக இந்த பகுதியில் வசிப்பவர்கள் தினமும் சுமார் 500 மீட்டர் மலையில் மேல்நோக்கி நடக்க வேண்டியிருந்தது.
இந்தச் சமூகத்தினரின், குறிப்பாக பெண்களின் துயரத்தை குறைப்பதற்காக, தனது குக்கிராமத்திற்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதில் ராம்தாஸ் முன்னிலை வகித்தார். அதை அடைய, வசிப்பிடத்திற்கு அருகில் 5,000 லிட்டர் தொட்டி கட்டப்பட்டது.
நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், தரத்தைப் பராமரிப்பதற்கும், ராம்தாஸ் குடியிருப்பாளர்களை அணி திரட்டியதுடன், வசிப்பிடத்தில் ஆண்டு முழுவதும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய சில நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை விளக்கினார்.
சமூகப் பங்களிப்பு மூலம் பரவலாக்கப்பட்ட நீர்நிர்வாகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நீர் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவதால், போஜனேவடியில் கோடை மாதங்களில் கூட நீர்ப்பற்றாக்குறை கடந்த கால விஷயமாகிவிட்டது. ஜல் ஜீவன் இயக்கம், நாட்டின் ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பங்களுக்கும் வழக்கமான மற்றும் நீண்ட கால அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில், போதுமான அளவு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம்)
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1647671)
வருகையாளர் எண்ணிக்கை : 247