அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புளியங்கொட்டை மற்றும் பருத்திக் கழிவுகளை, சூப்பர்கெபாசிட்டர் மின்முனைகளாக மாற்றலாம்

Posted On: 21 AUG 2020 12:36PM by PIB Chennai

புளியங்கொட்டை மற்றும் பருத்தி கழிவினைப் பயன்படுத்தி, குறைந்த செலவிலான சூப்பர்கெபாசிட்டர் மின்முனைகளை உருவாக்கலாம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பவுடர் மெட்டலார்ஜி மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச நவீன ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், புளியங்கொட்டைகளையும், தொழிற்சாலையில் கிடைக்கும் பருத்திக் கழிவுகளையும் பயன்படுத்தி குறைவான விலையில், சூப்பர் கெபாசிட்டர் மின்முனைகளை தயாரித்துள்ளனர். இவற்றை மின்சக்தியை சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தலாம். விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1647534

******


(Release ID: 1647611) Visitor Counter : 190