பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய ஊரகப்பகுதியில் பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்கள் இடையே நிலைத்த வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான கூட்டு உடன்படிக்கையில் மத்திய பழங்குடியின விவகாரம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகங்கள் கையெழுத்து

Posted On: 20 AUG 2020 9:00PM by PIB Chennai

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (என்ஆர்எல்எம்) பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்கள் இடையே நிலைத்த வாழ்வாதார வாய்ப்புகளை கூட்டாக ஏற்படுத்தி, ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு அறிவிப்பில் மத்திய பழங்குடியின விவகார அமைச்சகத்தின் செயலர் திரு. தீபக் காண்டேகர், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக செயலர் திரு.என்.என். சின்ஹா ஆகியோர், 18.08.2020 அன்று பரஸ்பரம் இரு தரப்பின் வலிமையை பகிர்ந்து கொள்வதற்காக கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திருமதி. ரேணுகா சிங் சருத்தா, ஊரக வளர்ச்சி துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் சோதி மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ( டிஏஒய்- என்ஆர்எல்எம்) , 8.9 லட்சம் பழங்குடியின சுய உதவிக்குழுக்கள் உள்பட இந்தியாவில் உள்ள மகளிர் தலைமையிலான சுய உதவிக்குழுக்களுக்கு விரிவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், நிறுவன ரீதியிலான ஆதரவு, வாழ்வாதார சேவைகள், சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் மற்றும் சந்தையை அணுகுதல் ஆகியவற்றை வழங்குகிறது. இதேபோல, பழங்குடியின துணைத் திட்டங்களுக்கு சிறப்பு மத்திய உதவி, அறிவிக்கப்பட்ட பழங்குடியினரைக் கொண்ட மாநிலங்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கும் பிரிவு 275 (1) –ன் கீழ் மானியம், பிவிடிசியில் அறிவிக்கப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பழங்குடியின பிரிவின் வளர்ச்சி போன்ற ஏராளமான முன்முயற்சிகளை வரையறுக்கப்பட்ட அளவுகோள்களுடன் மத்திய பழங்குடியின விவகார அமைச்சகம் வழங்குகிறது.

பழங்குடியின அமைச்சகம் மற்றும் டிஏஒய்-என்ஆர்எல்எம் –மின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று உதவுவதால், பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்த இரண்டு அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளை முன்னெடுத்து , பெரும் பலன்களை பெறுவதற்கு , இரண்டு அமைச்சகங்களாலும், பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நடவடிக்கைகள் வருமாறு ; பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட வாழ்வாதார சொத்துக்களை  அடையாளம் காணுதல்; பொது பழங்குடியின சமுதாய சொத்துக்களை அடையாளம் காணுதல்; பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்வாதாரம் மற்றும் தொழில்களை வலுப்படுத்துவதன் மூலம், பிவிடிஜி-க்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த மேம்பாடு; ஓவிடிஜி குடியிருப்புகளின் ஒருங்கிணைந்த ஜிபிடிபி மற்றும் சிசிடி திட்டங்கள்; வன் தன் யோஜனா திட்டதின் கீழ் பதிவு செய்யப்படும் பழங்குடியின குடும்பங்களை அடையாளம் காணுதல், சுய உதவிக் குழுக்கள் மூலம் பழங்குடியின சமுதாயத்தினருக்கு கடனுதவி மற்றும் திறன் உருவாக்க ஆதரவு.

பழங்குடியின விவகார அமைச்சகத்தின் நடவடிக்கைகள் வருமாறு ; எஸ்ஆர்எல்எம் மற்றும் மாநில செயல் திட்டத்துக்கு திட்டமிடுதல் ஆதரவு, வாழ்வாதார ஆண்டு செயல் திட்டத்தில் அடங்கிய திட்டம்; இஎம்ஆர்எஸ்  மற்றும் ஆசிரமப் பள்ளிகளில் ,மெஸ் மேலாண்மை,  ஹவுஸ் கீப்பிங் எனப்படும் பராமரிப்பு பணி,  தூய்மைப் பணி மற்றும் இதர பணிகள் உள்ளிட்ட அவுட் சோர்சிங் போன்றவற்றுக்கு பெண்களை அடையாளம் காணுதல்; எஸ்ஆர் எல்எம் –ல் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு பொது வாழ்வாதார சொத்துக்களை உருவாக்கி மேம்படுத்துதல், எஸ்ஆர்எல்எம் ஒத்துழைப்புடன் பிவிடிஜிக்கான கருத்துருக்களை செயல்படுத்துதல்; வன் தன் திட்டத்தின்  சுய உதவிக்குழுக்கள்/ பிஜி –யில்  பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை அதிமாக சேர்த்தல்;  சுய உதவிக்குழுக்கள் மற்றும் பிஜி-க்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை கட்டமைப்பு மூலம் சந்தை வசதியை ஏற்படுத்துதல்.

*****



(Release ID: 1647583) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi