சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பதிவு ஆவணங்களில் உரிமையை இணைப்பதற்கான அறிவிக்கை குறித்த பரிந்துரைகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (எம்ஆர்டிஎச்) வரவேற்கிறது

Posted On: 20 AUG 2020 5:47PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஜி.எஸ்.ஆர் 515 (இ) ஆகஸ்ட் 18 2020 தேதியிட்ட வரைவை, சி.எம்.வி.ஆர் 1989-யின் படிவம் 20-ல் திருத்தம் செய்வதற்காக வெளியிட்டுள்ளது. உரிமையின் விவரங்கள் உரிமையின் கீழ், சரியாக பிரதிபலிக்கப்படவில்லை என்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. சிஎம்விஆரின் கீழ் உள்ள பல்வேறு படிவங்கள், மோட்டார் வாகனங்களை பதிவுசெய்யத் தேவை.

 

இதனைக் கருத்தில் கொண்டு, விரிவான உரிமை வகையை கண்டுபிடிக்க  கீழ்க் கண்டவாறு: சிஎம்விஆர் 1989 இன் படிவம் 20-ல் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. “4. உரிமையாளர் வகை தன்னாட்சி அமைப்பு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவனம் ஒட்டுநர் பயிற்சி மாற்றுத்திறனாளர்

(அ) ​​ஜிஎஸ்டி சலுகையைப் பெறுதல்

(ஆ) ஜிஎஸ்டி சலுகை இல்லாமல்

கல்வி நிறுவனம்

அரசு மேற்கொள்ளும் தனி நபரின்

உள்ளூர் நிறுவன நிர்வாகம்

பல உரிமையாளர், மற்றவர்கள்

காவல்துறை

மாநில அரசு

மாநில போக்குவரத்து

மாநகராட்சி / துறைகள்“.

மேலும், மாற்று திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாங்குதல் / உரிமையாக்குதல் / மோட்டார் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவற்றில் ஜிஎஸ்டி மற்றும் பிற சலுகைகளின் பலன்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

 

சி.எம்.வி.ஆர் 1989-ன் கீழ் தற்போதைய விவரங்களின்படி, கைப்பற்றப்பட்ட உரிமை மாற்றுத்திறனாளி குடிமக்களின் விவரங்களை பிரதிபலிக்காது. இத்தகையவர்கள் கனரக தொழில்துறையின் நிதி ஊக்கத்தொகைக்கான திட்டத்தின் படி, அரசாங்க திட்டங்களின் கீழ் கிடைக்கும் பல்வேறு சலுகைகளை முறையாகப் பெறுவது கடினம். திட்டமிடப்பட்ட திருத்தங்களுடன், அத்தகைய உரிமையாளர் விவரங்கள் சரியாக பிரதிபலிக்கப்படும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறமுடியும்.

 

இது தொடர்பான பரிந்துரைகள் அல்லது கருத்துக்களை, இணை செயலாளர் (எம்.வி.எல்), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், போக்குவரத்து பவன், நாடாளுமன்ற வீதி, புதுதில்லி-110001 (மின்னஞ்சல்: jspb-morth[at]gov[dot]in) என்ற முகவரிக்கு, அறிவிக்கை தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-----



(Release ID: 1647573) Visitor Counter : 161