சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் தொற்றுக்கு உரிய நடத்தைகளை உருவாக்கும் ஐஇசி அம்சம் மற்றும் ஊடாடும் விளையாட்டை டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்

Posted On: 20 AUG 2020 7:39PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கோவிட்-19 குறித்த ஊடாடும் விளையாட்டு ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த வகையில் முதல் விளையாட்டான கொரோனா போராளிகள் (www.thecoronafighters.in) மற்றும்  கோவிட்டுக்கு உரிய நடத்தையைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இரண்டு புதிய வீடியோக்களையும் அவர் வெளியிட்டார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே முன்னிலை வகித்தார்.

தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட விளையாட்டைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த டாக்டர் ஹர்ஷவர்தன், இந்த விளையாட்டு, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உரிய நடத்தைகள் மற்றும் சரியான கருவிகளை மக்களுக்கு கற்பிக்கும் சிறந்த, புதிய படைப்பாற்றலை வழங்குகிறது எனக்கூறினார். தொற்று பாதிப்பிலிருந்து தப்ப எடுக்க வேண்டிய சரியான முன்தடுப்பு நடவடிக்கைகளை நினைவுபடுத்தும் வகையில் , நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய விதத்தை விளையாடுபவர்களுக்கு அளிக்கும் வகையில் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்இத்துடன் வெளியிடப்படும் இரண்டு வீடியோக்கள், பொதுமக்களுக்கு பரந்த அளவில் முக்கியமான தகவல்களை, சுவாரஸ்யமான முறையில் வழங்கும் ஊடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் பங்களிப்பின் மூலம், போலியோ இயக்கம், சமூக இயக்கமாக மாறியதை நினைவு கூர்ந்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் சேர்ந்து தங்கள் பங்களிப்பைச் செலுத்தியதாக கூறினார். ‘’ போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தால்  இலக்குடன் கூடிய விரிவான பிரச்சாரம் காரணமாக, தொலைதூரத்தில் வசிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க வழி ஏற்பட்டது. இதேபோன்ற அணுகுமுறை கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும். கொரோனா கால முடக்கம் மற்றும் தளர்வு காலத்தில், அழைப்பு மெட்டுக்கள் ( காலர் டியூன்கள்) மூலமும், இதர ஊடகங்கள் மூலமும் , உரிய நடத்தைகள் பற்றி விளக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராட நமக்கு தடுப்பூசி கிடைக்கும் வரை, கோவிட்டுக்கு உரிய நடத்தைகள், ஆற்றல் மிக்க சமூக தடுப்பு மருந்தாக நம்மை பாதுகாக்கக்கூடியதாகும் என அவர் தெரிவித்தார்.

 


(Release ID: 1647570)