நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2020-21ஆம் ஆண்டுக்கான கரும்புப் பருவத்தில் சர்க்கரை ஆலைகள், கரும்புக்கு அளிக்கவேண்டிய நியாயமான இலாபகரமான விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 19 AUG 2020 4:33PM by PIB Chennai

2020-21 கரும்புப் பருவம் (அக்டோபர் -செப்டம்பர்) பருவத்திற்கு சர்க்கரை ஆலைகள் அளிக்கும் கரும்புக்கான நியாயமான லாபகரமான விலைக்கு (எஃப் ஆர் பி) வேளாண் பொருள்களுக்கான மதிப்பு, விலைகள் ஆணையம் (சிஏசிபி) அளித்த பரிந்துரைகளின் படி பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. விவரங்கள் வருமாறு:

 

  • 2020- 21 கரும்பு பருவத்திற்கான கரும்பின் எஃப் ஆர் பி குவிண்டால் ஒன்றுக்கு 285 ரூபாய் அடிப்படை மீட்பு விகிதம் 10%

 

  • மீட்பு விகிதத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தால் ஒவ்வொரு சதவிகிதத்திற்கும் ஒவ்வொரு குவின்டாலுக்கும் 0.1 சதவிகிதம் அதிகம் அதாவது குவிண்டால் ஒன்றுக்கு 2.85 ரூபாய் கூடுதல் தொகை

 

  • மீட்பு விகிதம் குறைய நேரிடும் பட்சத்தில் ஒவ்வொரு குவிண்டாலுக்கும் 0.1 சதவிகிதம் குறைவு அதாவது எஃப் ஆர் பி  விலையிலிருந்து 2.85 ரூபாய் குறைவு. இது 10 சதவீதத்திற்கும் குறைவாக, ஆனால் 9.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள ஆலைகளுக்கு மட்டும் பொருந்தும். 9.5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விலை, குவிண்டால் ஒன்றுக்கு 270.75 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

 

கரும்பு விளைவிக்கும் உவர்களுக்கு, அவர்களது வேளாண் பொருள்களுக்கு நியாயமான, லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கரும்புக் கட்டுப்பாடு ஆணை, 1966படி, இந்த நியாயமான, லாபகரமான விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் ஒரே சீராக நடைமுறைப்படுத்தப்படும்.

 

***


(Release ID: 1646993) Visitor Counter : 147