ஆயுஷ்
டெல்லி போலீஸ் குடும்பங்களின் வீட்டு வாசலுக்கே ஆயுர்வேதத்தை அழைத்து வர ‘தன்வந்தரி ராத்’ தொடங்கப்படுகிறது
Posted On:
18 AUG 2020 7:29PM by PIB Chennai
டெல்லி காவல்துறையின் குடியிருப்புப் பகுதிகளில் ஆயுர்வேதத் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) மற்றும் டெல்லி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்தச் சேவைகள் ‘தன்வந்தரி ராத்’ மற்றும் போலிஸ் ஆரோக்கிய மையங்கள் என்ற மொபைல் பிரிவு மூலம் வழங்கப்பட உள்ளதுடன், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தால் (AIIA) வழங்கப்பட உள்ளது.
ஆயுஷ் மற்றும் தில்லி காவல்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) கூட்டு முயற்சியான ஆயுரக்க்ஷா, ஆயுர்வேத நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நடவடிக்கைகள் மூலம் டெல்லி போலீஸ் போன்ற முன்னணி கோவிட் செயல் வீரர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, ஆயுர்வேதத் தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதாரப் பராமரிப்பு இப்போது டெல்லி காவல்துறையினரின் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2 மாத காலப்பகுதியில் கிட்டத்தட்ட 80,000 காவல் துறையினருக்கு, ஆயுராக்ஷா கிட்களை விநியோகித்த பின்னர், டெல்லி காவல்துறையினரில் கோவிட்-19 இன் இறப்பு விகிதமும், நோய்த் தொற்றால் பாதிப்பும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ஆயுஷ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. பிரமோத் குமார் பதக் தெரிவித்தார்.
******
(Release ID: 1646832)
Visitor Counter : 245