அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பெங்களூரு விஞ்ஞானிகள், மின்காந்த குறுக்கீட்டிற்கு கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை உருவாக்கியுள்ளனர்

Posted On: 18 AUG 2020 10:19AM by PIB Chennai

எச்.ஜி வெல்ஸ் 'இன்விசிபிள் மேன்'(கண்ணுக்கு புலப்படாத மனிதன்) உடலின் ஒளியியல் பண்புகளை கண்ணுக்கு தெரியாதவாறு மாற்றினார். அதே போன்ற ஒரு செயல்திறனை விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி சாதித்துள்ளனர். வெளிப்படையான அடி மூலக்கூறுகளில் தொடர்ச்சியான படத்திற்கு பதிலாக ஒரு உலோக வலை துவார கட்டமைப்பை வடிவமைப்பதன் மூலம் மின்காந்த குறுக்கீட்டுக்கு (ஈ.எம்.ஐ) வெளிப்படையான கவசத்தை இதன் மூலம் உருவாக்க முடியும். கண்ணுக்குப் புலப்படாத கவசத்தை ராணுவம் தொடர்பான பல்வேறு ரகசியமான பயன்பாடுகளில் உபயோகப்படுத்தலாம். மேலும், மின்காந்த அலை உமிழ்ப்பான் அல்லது உறிஞ்சும் சாதனங்களில் அவற்றின் அழகிய ரசனையோடு சமரசம் செய்யாமல் படர்ந்திருக்கும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தன்னாட்சி நிறுவனமான பெங்களூரு, நானோ மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மைய(சி.என்.எஸ்) விஞ்ஞானிகள் இந்த வெளிப்படையான வளையத்தக்க மின்காந்த குறுக்கீட்டு கவசங்களை முன்னோடியாக உலோக வலை துவாரங்களால் உருவாக்கி, பூச்சு தெளிப்பான் வழியாக விரிசல் வார்ப்பு முறையில் பயன்படுத்தி, அவர்களது ஆய்வுக்கூடத்தில் செயல்படுத்தி உள்ளனர்.

இந்தத் திட்டத்தில் பணிபுரியும் சி.என்.எஸ் விஞ்ஞானி டாக்டர் அசுதோஷ் கே சிங் கூறுகையில், “இந்த கண்டுபிடிப்பு ஆற்றல் மிகுந்தது, அதிக அளவில் பயனளிக்கும் வெளிப்படையான மற்றும் நெகிழ்வான மின்காந்த குறுக்கீடு கவசங்களுக்கான மிகப்பெரிய தேவையை நிறைவு செய்யும். மேலும், மின்காந்த அலை உமிழ்ப்பான் அல்லது உறிஞ்சும் சாதனங்களில் அழகிய ரசனையோடு சமரசம் செய்யாமல் படர்ந்திருக்கும்”, என்று குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1646583

********


(Release ID: 1646695) Visitor Counter : 232