பாதுகாப்பு அமைச்சகம்
கப்பல் படை வீரர்களுக்கு சுதந்திரதினம் 2020இல் வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள்
ஆகஸ்ட் 15, 2020, 0001 மணிக்கு முன்பாக இதனை வெளியிடவோ / ஒலிபரப்பவோ / அல்லது சமூக ஊடகங்களில் பயன்படுத்தவோ கூடாது
Posted On:
14 AUG 2020 5:37PM by PIB Chennai
நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்)
கேப்டன் மிரிகங்க் ஷியோகந்த் (05107-F)
இந்த விமானப்படை அதிகாரி இந்திய விமானப்படையின் மிக்-29 கே விமானங்களை இயக்குவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் ஆவார். கேப்டன் ஷியோகந்த் 16 நவம்பர் 2019 அன்று 11:47 மணிக்கு டபோலின் விமான நிலையத்தில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக ஒரு பயிற்சி விமானியுடன் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கும் வகையில் முன் இருக்கையில் வான்வழிப் பயணம் மேற்கொண்டார். விண்ணில் எழும்பி 1200 அடி உயரத்தை அடையும் போது மிக் 676 விமானம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பறவைகளின் கூட்டத்தை எதிர்கொண்டது. உடனடியாக கேப்டன் ஷியோகந்த் பயிற்சி விமானியிடம் இருந்து விமானக் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொண்டு விமானத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்திற்கு உடனடியாக கொண்டு சென்றார். அதேசமயம் வானொலி மூலம் அவசர நிலையை தெரிவித்ததோடு விமானக் கட்டுப்பாட்டை மீண்டும் கைவசப்படுத்த தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்தார். விமானத்தின் இடதுபக்க இயந்திரம் செயலற்ற நிலையில் மற்றும் வலதுபக்க இயந்திரம் மற்றும் கியர்பாக்சில் தீப்பற்றிக் கொண்ட நிலையில் விமானிக்கு தாம் விண்ணில் சில வினாடிகள் மட்டுமே இருக்கப் போகிறோம் என்பது தெளிவானது. விமானம் சுவாரி எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் மற்றும் தெற்கு கோவாவின் மக்கள் நெருக்கம் அதிகமான பிராந்தியத்தில் விழுந்து நொறுக்கக்கூடும் என்பது விமானிக்குத் தெரிந்தது. இந்தத் தருணத்தில் விமானி மிகச் சிறந்த தொழில்நுட்ப / விமான இயக்குதல் திறன்களையும் சமயோசிதமான அறிவுடனும், அவசர சூழ்நிலையைக் கையாண்டு எண்ணற்ற மனித உயிர்களின் இழப்பையும் தேசிய சொத்து சேதமடைவதையும் தடுத்தார். அதுமட்டுமல்லாமல் தன்னையும் பயிற்சி விமானியையும் பாதுகாப்பான முறையில் விமானத்தில் இருந்து வெளியேற்றிக் கொண்டார். கேப்டன் மிரிகங்க் ஷிவாகந்த்துக்கு (05107-F) நவசேனா விருது (தீர்ச்செயல்) வழங்கப்படுகிறது.
நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்)
கமாண்டர் தனுஷ் மேனன் (05556-A)
”ஆப்பரேஷன் வர்ஷ ரகத்”துக்காக 8 ஆகஸ்ட் 2019 முதல் கர்நாடகாவின் பெலகாவியில் கமாண்டர் தனுஷ் மேனன் நேவல் டிடச்மண்ட் கமாண்டராக நியமிக்கப்பட்டார். விமானத்தின் விமானியாக இந்த அதிகாரி 9 ஆகஸ்ட் 2019 அன்று மிகவும் சவாலான எஸ்.ஏ.ஆர் மிஷனை மிகவும் குறைவான வெளிச்சத்திலும் கடும் மழைக்கு இடையிலும் ஆபத்தான சூழலிலும் செயல்படுத்த முனைந்தார். இந்த விமானி விமானம் வட்டமிடும் உயரத்தை 125 அடியாக குறைக்கக் கூடிய அபாயகரமான முடிவை துணிச்சலுடன் எடுத்தார். விமானத்தை 25 நிமிடங்களுக்கு 15 அடி உயரத்திலேயே வட்டமிட்டு பறக்கச் செய்து அபாயகரமான தடைகளை நீக்கி ஆபத்தில் இருந்த 2 உயிர்களை காப்பாற்றினார். ஆபத்தான சூழ்நிலையிலும் தன்னலம் கருதாமல் செயல்பட்ட கமாண்டர் தனுஷ் மேனனுக்கு (05556 A) நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) அளிக்கப்படுகிறது.
நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்)
ஹரிதாஸ் குண்டு, சிஹெச்ஏ (எஃப்டி) 130956-B
ஹரிதாஸ் குப்தா, சிஹெச்ஏ (எஃப்டி) கர்நாடகாவின் பெலகாவியில் நேவல் டிடச்மெண்ட்டுக்கு ஆப்பரேஷன் வர்ஷ ரகத்துக்காக 8 ஆகஸ்ட் 2019 முதல் விமானம் இயக்கும் குழுவில் டைவராக நியமிக்கப்பட்டார். குறைந்த வெளிச்சம், கடும் மழை மற்றும் நதியின் கொந்தளிப்பு ஆகிய பிரச்சினைகளுடன் சார் மிஷன் என்பது மிகச் சவாலான ஒன்றாக இருந்தது. தைரியத்துடன் 6 அடி உயரத்தில் இருந்து கொண்டு டைவர் குண்டு தப்பிப் பிழைத்தவர்களை நோக்கி நகர்ந்தார். கிட்டத்தட்ட மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு இருந்த அவர்களைக் காப்பாற்றி மீட்புப் பெட்டகத்தில் பத்திரமாக இறக்கினார். தீவிரமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படக் கூடிய அதிகபட்சமான ஆபத்துக்காரணி இருந்த நிலையிலும் சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வரை தங்கி இருந்து இவர் உதவினார். அபாயகரமான சூழ்நிலையிலும் தன்னலமற்ற சேவைக்காக ஹரிதாஸ் குண்டு சிஹெச்ஏ (எஃப்டி) 130956-Bக்கு நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) வழங்கப்படுகிறது.
நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்)
நவீன் குமார், எல்எஸ் (யுடபிள்யூ), 230889-Z
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் ஒரு மாலுமியாக இவர் செயல்பட்டார். தனது வீரதீரச் செயல் மூலம் இந்த மாலுமி இந்தியக் கப்பற்படையின் பாரம்பரியப் பெருமையை நிலைநாட்டும் வகையில் தனது சொந்தப் படைக்குழு வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியதோடு இந்த ஆப்பரேஷனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கவும் உதவினார். ஆபத்தான சூழ்நிலையிலும் தன்னலமற்ற இவரது சேவைக்காக நவின்குமார் எல்எஸ் (யுடபிள்யூ)க்கு நவசேனா பதக்கம் (வீரதீரச் செயல்) வழங்கப்படுகிறது.
(Release ID: 1645943)
Visitor Counter : 221