பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவம் மற்றும் துணைராணுவப் படையினரில் 84 வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்க குடியரசுத் தலைவர் அனுமதித்துள்ளார்.

Posted On: 14 AUG 2020 5:28PM by PIB Chennai

ஆகஸ்ட் 15, 2020, 0001 மணிக்கு முன்பாக இதனை வெளியிடவோ / ஒலிபரப்பவோ / அல்லது சமூக ஊடகங்களில் பயன்படுத்தவோ கூடாது

 

ராணுவப்படைகளின் உச்சநிலை கமாண்டராக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ராணுவப்படை வீரர்களுக்கும், துணைராணுவப்படை வீரர்களுக்கும் 84 விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்இவற்றில் ஒரு கீர்த்தி சக்ரா விருது, ஒன்பது சௌர்யா சக்ரா விருதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப் பட்டயம் (தீரச்செயல்), 60 சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), நான்கு நவசேனா பதக்கங்கள் (தீர்ச்செயல்) மற்றும் 5 வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும்.

மேலும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய ராணுவ வீரர்களில் 19 வீரர்களுக்கு பாராட்டுப்பத்திரங்கள் (மென்ஷன்-இன்-டிஸ்பேட்சஸ்) வழங்குவதற்கு குடியரசுத்தலைவர் அனுமதித்துள்ளார்இதில் ஆப்பரேஷன் மேகதூத் மற்றும் ஆப்பரேஷன் ரக்‌ஷக்ஆகியவற்றில் உயிர் இழந்த 8 வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.

ராணுவப்படை வீரர்கள் மற்றும் துணைராணுவப்படை வீரர்களுக்கான விருதுப் பட்டியலை இந்த இணைப்பில் பார்க்கலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1645808


(Release ID: 1645923) Visitor Counter : 312