ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷேகாவதந்த், குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த கூட்டு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்
Posted On:
14 AUG 2020 6:24PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷேகாவதந்த், குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, கூட்டாக குஜராத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தை திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டத்தை காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார். குடிநீர் வழங்கல் என்பது ஒரு சேவை வழங்கல் ஆகும், இதில் நீரின் அளவு, வழங்கப்பட்ட தரம் மற்றும் நீர்வழங்கலின் கால அளவு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும், இதற்கான முக்கிய திட்டமான ஜல் ஜீவன் இயக்கம் (JJM) கடந்த ஆண்டு முதல் மாநிலங்களுடன் கூட்டாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும், அதாவது கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு கிடைக்கிறது.
குஜராத்திகள், 2024ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் இணைப்பை வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 2022க்குள் 100 சதவீதம் இத்திட்டத்தை இந்த இயக்கத்தின் மூலம் முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்,
குஜராத் மாநிலத்தில் உள்ள 93.03 லட்சம் கிராமப்புற வீடுகளில் 68.63 லட்சம் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020-21 காலப்பகுதியில் 11.15 லட்சம் வீடுகளில் குழாய் இணைப்புகளை வழங்க குஜராத் திட்டமிட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டில், ரூ.883.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் மாநிலப்பங்கு உட்பட ரூ. 1,777.56 கோடி கிடைப்பது உறுதி. குஜராத்துக்கு 15 வது நிதிஆணையத்தின் கீழ் ரூ. 3,195 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்டம் தொடர்பான முதலீடுகளுக்கு வழங்கப்படுகிறது, அதில் 50 சதவீதம் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திற்காக கட்டாயமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
மாநிலத்தில் உள்ள 18,191 கிராமங்களில், 17,899 கிராமங்களில் தற்போது குழாய் நீர் விநியோக முறைகள் உள்ளன. 2020 டிசம்பருக்குள் மேலும் 6,000 கிராமங்கள் குழாய் இணைப்பிற்கு 100 சதவீதம் தயாராக இருக்கும் என்று குஜராத் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் 5 மாவட்டங்கள் வீட்டுக்குழாய் இணைப்புகளுடன் முழுமையாக இணைக்கப்படும். உண்மையில், இந்த நிதியாண்டில் 100 சதவீதம் வீட்டுக்குழாய் இணைப்புகளைக் கொண்ட 12 மாவட்டங்களை உள்ளடக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
***********
(Release ID: 1645879)
Visitor Counter : 190