சுற்றுலா அமைச்சகம்

நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடரின் கீழ், ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியப் போராட்டத்தில் அதிகமாக வெளியே தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் 47-வது அத்தியாயத்தை சுற்றுலா அமைச்சகம் வழங்கியது

Posted On: 13 AUG 2020 7:57PM by PIB Chennai

இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வலைதளத் தொடரில், மத்திய சுற்றுலா அமைச்சகம், 2020 ஆகஸ்ட் 12-ம் தேதி,  ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியப் போராட்டத்தில் அதிகமாக வெளியே  தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் புதிய அத்தியாயத்தை வெளியிட்டது.

நமது தேசத்தைப் பாருங்கள் என்ற வலைதளத் தொடரின் 47-வது அத்தியாயத்தை , ‘’ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்திய போராட்டத்தில் அதிகமாக வெளியே  தெரியாத கதைகள்’’ என்ற தலைப்பில் திருமிகு. அகிலா ராமன், திருமிகு. நயன்தாரா நாயர் ஆகியோர் வழங்கினர்.

அவர்களது கதைகள் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பிரதிபலித்தன. இந்த அத்தியாயத்தில், பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடியவர்களின் அதிகமாக வெளியே தெரியாத கதைகளை விளக்கி நம்மை அக்காலத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே பாரதம்,உன்னத பாரதம் என்னும் இயக்கத்தின் கீழ், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையை பறைசாற்றும் முயற்சியாக  நமது தேசத்தைப் பாருங்கள் தொடர் வழங்கப்படுகிறது.

1) சிவகங்கை –வேலு நாச்சியார்

2) மும்பை- பெஞ்சமின் ஹார்னிமன்

3) இந்தியாவைக் கட்டுபடுத்திய நிறுவனங்கள்

A) நீதித்துறை- b) ரயில்வே- c) ஆயுதப் படைகள்- D) பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி-

 4) மதுரை மாசி வீதி

நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-நிர்வாக துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது  https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured  என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்.

இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இதன் தலைப்பு , ஜாலியன்வாலா பாக்; விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை என்பதாகும். தொடருக்கான பதிவுகளை  https://bit.ly/ JallianwalaBaghDAD-இல் செய்யலாம்.

*****



(Release ID: 1645713) Visitor Counter : 186