நிதி அமைச்சகம்
சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
प्रविष्टि तिथि:
11 AUG 2020 10:06PM by PIB Chennai
கருப்புப் பணம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து, சில சீனர்கள் மற்றும் அவர்களின் இந்திய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயர்களில் நாற்பதுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள், சீனர்களின் சார்பாகத் துவக்கப்பட்டிருப்பதும், ரூ.1000 கோடிக்கும் அதிகமான கடன் பெற முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்களின் பெயரில், சீன நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனமும், அதன் தொடர்புடைய அமைப்புகளும் ரூ. 100 கோடிக்கு போலி முன் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
****
(रिलीज़ आईडी: 1645279)
आगंतुक पटल : 183