விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கிருசி மேக் தளத்தை தொடங்கி வைத்தார்

Posted On: 11 AUG 2020 6:11PM by PIB Chennai

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று கிருசி மேக் என்னும் விவசாய மேகம் (தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி முறை- மேகம் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள்) தளத்தை, மெய்நிகர் முறையில் தொடங்கிவைத்தார். விவசாய பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கக் கட்டமைப்பு (கேவிசி அலுநெட்) மற்றும் உயர் விவசாய கல்வி நிறுவனங்களுக்கான ஆன்லைன்  அங்கீகார முறை ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை 2020 –க்கு ஏற்ப ,விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருத்தமான, உயர்தரமான கல்வியை வழங்குவதை ஒட்டுமொத்த நோக்கமாகக் கொண்டு, தேசிய விவசாயக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் தேசிய விவசாய உயர் கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் எந்தப் பகுதியையும் மட்டுமல்லாமல் உலகின் எப்பகுதியையும் அணுகும் வகையில், முக்கிய ஆராய்ச்சி சார்ந்த தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாப்பது அவசியம் என திரு. தோமர் வலியுறுத்தினார். விவசாயத்தில் தனியார் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு. நரேந்திரமோடியால்  உருவாக்கப்பட்ட டிஜிட்டல் விவசாய புதிய இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்ல விவசாய மேகம் ஒரு படியாகும் என அமைச்சர் கூறினார்.

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பர்சோத்தம் ரூபலா, 2-3 இந்தியா வேளாண் ஆராய்ச்சிக் குழும (ICAR) நிறுவனங்கள் சர்வதேச மதிப்புக்கு இணையான ஆராய்ச்சி மையங்களாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சியாளர்களுக்கு உடனுக்குடன் தரவுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் இரு. கைலாஷ் சவுத்ரி, விவசாய மேகத்தை உருவாக்கியதற்காக ஐசிஏஆர் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தார். இது, புதுதில்லி ஐசிஏஆர்இந்திய விவசாய புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்ஐசிஏஆர்- தரவு மையத்தையும், ஐதராபாத் ஐசிஏஆர்- தேசிய விவசாய ஆராய்ச்சி மேலாண்மை அகாடமியில் பேரிடர் மீட்பு மையத்தையும்  ஒருங்கிணைக்கிறது என்று கூறினார். இது விவசாயத்தில் ஒரு புரட்சிகரமான முயற்சி என அமைச்சர் பாராட்டினார்.

விவசாய மேகத்தின் சிறப்பு அம்சங்கள்

1.         தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி முறையின் டிஜிட்டல் விவசாயத்தின் சேவைகள் மற்றும் கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்தல்.

2.         தேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வி முறைமேகக் கட்டமைப்பு மற்றும் சேவைகள் , அதன் அங்கமான ஐசிஏஆர்-டிசி, ஐசிஏஆர் கிருஷிமேக் என்னும் விவசாய மேகம் வலுவான தளத்தை வழங்குகிறது. -அலுவலகம், ஐசிஏஆர்-இஆர்பி, கல்வி வலைதளம், கேவிகே வலைதளம், கைபேசிச் செயலிகள், ஐசிஏஆர் நிறுவன இணையதளங்கள், கல்வி மேலாண்மை முறை, பழைய மாணவர் வலைதளம், இளநிலை மற்றும் முதுநிலை  -படிப்புகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப அம்சங்களைப் பூர்த்தி செய்ய இது பயன்படும்.

3.         விவசாயப் பல்கலைக்கழகங்கள் தங்களது வலைதளங்கள் மற்றும் ஐடி தீர்வுகளை வடிவமைக்கும் வகையில், நாகெப்-பின் கீழ், ஏற்கனவே இருக்கும் ஐசிஏஆர் தரவுகளை விரிவாக்குதல்.

4.         தற்போதைய கோவிட்-19 சூழலில், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளால் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதும், விஞ்ஞானிகள் தங்கள் சகாக்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஒத்துழைக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

5.         ஐதராபாத் நார்மில், ஐசிஏஆர்- கிருசி மேக், புதுதில்லி ஐசிஏஆர்-ஐஏஎஸ்ஆர்ஐ-யில்  ஐசிஏஆர்- தரவு மையத்துடன் இணைக்கப்பட்டு, -நிர்வாகம், ஆராய்ச்சி, இந்தியாவில் விவசாயத்துறையில் கல்வி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை அணுகும் வகையில், தரத்தை உயர்த்தவும், அபாயத்தை குறைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

6.         ஐதராபாத் நார்ம், மாறுபட்ட நில அமைப்புடன் உள்ளதால், புதுதில்லி ஐசிஏஆர்- ஐஏஎஸ்ஆர்ஐ-யில் உள்ள ஐசிஏஆர்- தரவு மையத்துடன்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரவு மைய சூழலைக் கட்டுப்படுத்தக்கூடிய ,ஈரப்பதம் குறைந்த பொருத்தமான தட்பவெப்ப நிலை நிலவுவதாலும்பொருத்தமான திறன் மிக்க நபர்கள் கிடைப்பதாலும்ஐதராபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

7.         இமேஜ் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, நோய், பூச்சிகள் கண்டறிதல், பழங்கள் முதிர்வடைந்து பழுக்கும் பருவத்தைக் கண்டறிதல், கால்நடைகளில் நோய் கண்டறிதல் போன்ற ஆழ்ந்த கற்றல் அப்ளிகேசன்களை உருவாக்குதல், ஈடுபடுத்துல் ஆகியவற்றுக்கான ஏஐ/ஆழ்ந்த கற்றல் மென்பொருள்கள்/ உபகரணங்களுடன் கூடிய புதிய மையம் .


(Release ID: 1645168) Visitor Counter : 339