சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் ‘சுய சார்பு இந்தியா’ கனவை அடைய, டாக்டர் ஹர்ஷ் வர்தன் மத்தியப் பிரதேச முதலமைச்சருடன் மாநிலத்தின் சுகாதார சிக்கல்கள் குறித்து இணையம் வாயிலாக உரையாடினார்.

Posted On: 10 AUG 2020 7:42PM by PIB Chennai

இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்தியப்பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் முன்னேற்றத்திற்கு தனது உதவியை நாடுமாறு மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகானை கேட்டுக்கொண்டார்.

2023 ஆம் ஆண்டுக்குள் மத்திய பிரதேசத்தை ‘சுயசார்பு மாநிலமாக’ ஆக்குவதற்கு சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு திட்ட வரைபடத்தை மத்தியப்பிரதேச அரசு அதிகாரிகள் இணையம் வாயிலாக முன்வைத்தனர். டாக்டர் ஹர்ஷ் வர்தன் அது குறித்து அவர்களுக்கு தனது மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். அவரது பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று திரு சவுகான் உறுதிமொழி அளித்தார்.

ஆரம்பத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "மத்தியப்பிரதேசத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் போது வாக்குறுதி மட்டும் அளிக்காமல் நிலைமையைத் திறமையாக நிர்வகிப்பதற்காகவும்", "தனிப்பட்ட முறையில் அவர் நோயிலிருந்து மீண்டு வந்ததற்காகவும்" திரு. சவுகானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ‘உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு’ வழங்கத் தீர்மானித்த சில இந்திய மாநிலங்களில் ஒன்றா மத்தியப்பிரதேசம் திகழ்வதற்க்கு வாழ்த்திய அவர், “78% மக்கள் ஆயுஷ்மான் பாரத் பிரத மந்திரி ஆரோக்கிய வாழ்க்கைத் திட்டத்தின் கீழ் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

மாநில அதிகாரிகள் முன்வைத்த 8 குறிக்கோள்கள் மற்றும் 33 அதிரடி செயல் திட்டங்களுக்கும் ஒத்துக்கொண்ட அவர், அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது மாநிலத்தை சுயமாக நிறைவடையும் என்றும், பிரதமரின் ‘சுய சார்பு இந்தியா’ கனவை நனவாக்குவதற்கான ஒரு படியாக இருக்கும் என்றும் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

*************(Release ID: 1644925) Visitor Counter : 12