அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இமயமலை புவிவெப்ப நீரூற்றுகள், வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன

Posted On: 10 AUG 2020 12:45PM by PIB Chennai

எரிமலை வெடிப்புகள், பல நெருக்கமான இடைவெளிகளைக் கொண்ட மண்டலங்கள் மற்றும் புவிவெப்ப அமைப்புகள் மூலம் பூமியின் உட்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கு கார்பன் வெளியேறுவது பூமியின் குறுகிய மற்றும் நீண்ட கால பருவநிலையை பாதிக்கக்கூடிய புவியின் கார்பன் சுழற்சிக்கு வித்திடுகிறது. மாறுபட்ட வெப்பநிலை மற்றும் வேதியியல் நிலைமைகளைக் கொண்ட சுமார் 600 புவிவெப்ப  நீரூற்றுகள் இமயமலையில் இருந்து புறப்படுகின்றன. பிராந்திய மற்றும் உலகளாவிய பருவநிலையில் அவற்றின் பங்கு, அத்துடன்  டெக்டோனிக் தகடுகளின் உந்துதலால் ஏற்படும் வாயு வெளியேற்ற செயல்முறை ஆகியவற்றின்  கார்பன் சுழற்சிக்கான வெளியேற்றத்தை மதிப்பீடுகையில் புவி வெப்பமயமாதலுக்கும் பரிசீலிக்கப்பட வேண்டியது  அவசிய,மாகும்..

 

இமயமலையின் கார்வால் பிராந்தியத்தில் சுமார் 10,000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இமயமலை புவிவெப்ப நீரூற்றுகள், குறிப்பிடத்தக்க அளவில் கார்பன்-டை-ஆக்சைடை (CO2) வெளியேற்றுவதால் வளமிக்க நீர் கிடைக்கிறது இந்த நீருற்றுகளிலிருந்து வாயு வெளியேற்றத்தை ஆராய்ந்து வகைப்படுத்திய இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இயமலை புவியியல் வாடியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடில் தேவையற்ற வாயு வெளியேற்றம் (திரவங்களிலிருந்து கரைந்த வாயுக்களை நீக்குதல், குறிப்பாக நீர் அல்லது நீர்வாழ் கரைசல்கள்) பெருக்கெடுத்து ஓடுவது வளிமண்டலத்திற்கு ஆண்டுக்கு 7.2 × 10 6 மோல் (mol) ஆகும்.

 

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆராய்ச்சி என்ற றிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்த வெப்ப நீரூற்றுகளில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு இமையமலை மையத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் கார்போனட் பாறைகளிலிருந்து உருமாற்றம் செய்யப்பட்டுப் பெறப்படுகிறது. அத்துடன், கரிப்பொருளில் இருந்து பிராண வாயுவை உருவாக்க மேக்மடிசம் செய்யப்படுகிறது. பெரும்பாலான புவிவெப்ப நீரில் ஆவியாதலும், அதைத்தொடர்ந்து சிலிகேட் பாறைகளின் வானிலையும் ஆதிக்கம் செலுத்துகிறது மேலும் ஐசோடோபிக் பகுப்பாய்வுகள் புவிவெப்ப நீருக்கான ஒரு விண்கல் மூலத்தை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன.



(Release ID: 1644841) Visitor Counter : 223