ஜவுளித்துறை அமைச்சகம்

ஆகஸ்ட் 07, 2020 அன்று தேசிய கைத்தறி நாள்- ஜவுளி அமைச்சகம், மெய்நிகர் தளத்தில் விழா ஏற்பாடு

Posted On: 06 AUG 2020 3:01PM by PIB Chennai

ஆகஸ்ட் 07 , 2020 அன்று 6 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவிட் -19 நோய்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, மெய்நிகர் தளம் மூலம் ஜவுளி அமைச்சகம் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய ஜவுளி மற்றும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகவும், ஜவுளி அமைச்சகச் செயலாளர் திரு. ரவி கபூர் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர். இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு.ஜெய் ராம் தாக்கூர் இவ்விழாவில் சிம்லாவில் இருந்து மெய்நிகர் முறையில்  இணைந்துகொள்கிறார்.

 

இந்த விழாவின் போது கூடுதலாக இந்தியா முழுவதும் கைத்தறித் தொகுப்புகள் (கிளஸ்டர்கள்), ஆடை அலங்காரத் தொழில்நுட்ப தேசிய நிறுவனங்களின் வளாகங்கள், அனைத்து 28 நெசவாளர் சேவை மையங்கள், தேசிய கைத்தறி மேம்பாடு நிறுவனம், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவற்றுடன், இமாச்சலப்பிரதேசம் குலுவில் உள்ள கைத்திறன் கைத்தறி கிராமம், மும்பையில் உள்ள ஜவுளிக்கமிட்டி மற்றும் சென்னையில் உள்ள கைத்தறி ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கண்காட்சி ஆன்லைனில் இணைக்கப்படும். மேலும் இவ்விழாவுக்கு பொருத்தமான நிகழ்வுகள் அனைத்தும் கைத்தறிகள் மேம்பாடு ஆணையரின் துணை அலுவலகங்களான, தேசிய நெசவாளர் சேவை மையங்கள், கைத்தறி மேம்பாடு கவுன்சில் மற்றும்  ஆடை அலங்கார தொழில்நுட்ப தேசிய நிறுவனங்களின் பல்வேறு வளாங்களிலும் ஏற்பாடு செய்யப்படும்.

 

1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அதே தேதியில் தேசிய கைத்தறி தினம்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடையே கைத்தறித் தொழில் மற்றும் சமூக – பொருளாதார மேம்பாட்டுக்கான அதன் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.



(Release ID: 1644744) Visitor Counter : 277