சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உயர்தர மையம் அமைக்க இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம் தில்லி ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 06 AUG 2020 7:12PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உயர் தரத்திலான மையம் ஒன்றை நிர்மாணிக்க புதுதில்லி இந்தியத் தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவு எடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும்.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஆணையத்தின் தலைவர் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, தில்லி ஐஐடி இயக்குனர் டாக்டர் வி.ராம் கோபால் ராவ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தக் கூட்டுறவு முறையில் தில்லி ஐஐடி-யானது என்.ஹெச்.ஏ.ஐ-உடன் இணைந்து ஏஐ மற்றும் எம்எல் ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட தரவு பகுப்பாய்வை உருவாக்கப் பணியாற்றும்.  நகலிய மாதிரிகளை உருவாக்குதல், தரவு அடிப்படையில் முடிவு எடுப்பதற்கான திறன்களை என்.ஹெச்.ஏ.ஐ மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான தரவைச் சேகரித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற அம்சங்களும் இணைந்து உருவாக்கப்படும்.  செயல்திட்ட மேலாண்மை மற்றும் தரவு மேலாண்மை, நெடுஞ்சாலை நெட்வொர்க் பயணத் தேவை மற்றும் சம்பவ நிர்வாகம், நெடுஞ்சாலைப் பாதுகாப்பு, நெடுஞ்சாலைப் பணி மண்டல நிர்வாகம், நெடுஞ்சாலை நடைபாதை நிர்வாக அமைப்பு போன்ற முக்கியமான அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் இரு அமைப்புகளும் இணைந்து பணியாற்றும்.  என்.ஹெச்.ஏ.ஐ ஆணையத்தின் தரவு மேலாண்மை கொள்கைக்கு உதவும் வகையில் உள்ளீடுகளை தில்லி ஐஐடி வழங்கும்.

*****
 



(Release ID: 1644736) Visitor Counter : 131


Read this release in: English , Hindi , Manipuri , Punjabi