புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பேராசிரியர் திரு. அஷுதோஷ் ஷர்மா, இந்தியாவில் குவைய அறிவியல் தொழில்நுட்பத்தில், தொழில்துறையைக் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்
Posted On:
06 AUG 2020 12:32PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பேராசிரியர் திரு அஷுதோஷ் ஷர்மா, இந்தியாவில் குவைய அறிவியல் தொழில்நுட்பத்தில், தொழில்துறையைக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியக் குவையத் தொழில்நுட்ப மாநாடு 2020இல் (ஐ க்யூ டி சி 2020) இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு (அசோசம்) ஏற்பாடு செய்திருந்த ‘குவையத்தில் உச்ச உயர்நிலை’யை இந்தியா அடைய வேண்டும் என்பது பற்றிய இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், “சைபர் தளங்களும், டிஜிட்டல் தளங்களும், தொலைதொடர்பு, கணினி கணக்கியல், முடிவெடுக்கும் திறன், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செயல்படுதல், அவற்றில் பங்கேற்றல் என்ற அனைத்தையும் உள்ளடக்கிய குவையத்தையும், தொழில்துறை 4.0 ஆகியவற்றையும் சார்ந்ததாகவே வருங்காலம் இருக்கும்” என்று கூறினார்
குவையத் தொழில்நுட்பத் துறையில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விவரித்த பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா, “அறிவியல் தொழில் நுட்பத்துறை, மூன்றாண்டுகளுக்கு முன் ‘முன்னணி தொழில்நுட்பம்’ என்ற புதிய பிரிவு ஒன்றைத் துவக்கியது. இப்பிரிவு சைபர் ஃபிசிகல் சிஸ்டம் பற்றிய திட்டமொன்றை துவக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் பல்வேறு இடங்களில் 21 ஹப்கள், நான்கு ஆராய்ச்சிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குவையத் தொழில்நுட்ப இயக்கத்தின் கட்டமைப்பு மற்றும் முறைகளுக்கான அடிப்படையை அமைத்து, தொழில்துறைக்கு அதிகாரம் அளிக்கக் கூடியவையாக இவை செயல்படும்” என்றார்.
இந்தியாவில் ‘குவைய கணினிக் கணக்கியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்தல் அதற்கான ஆயத்தப் பணிகள்’ ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். . இந்தியாவில் குவையத் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய கொள்கைகளையும், வரைபடங்களையும் குறித்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவாதித்தனர்.
******
(Release ID: 1643753)