ஊரக வளர்ச்சி அமைச்சகம்

கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 17 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கி, 6 வாரங்களில் ரூ.13,240 கோடி செலவிடப்பட்டுள்ளது

Posted On: 05 AUG 2020 9:14PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கிராமங்களுக்குத் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், கிராமபுறங்களில்  பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் (Garib Kalyan Rojgar Abhiyaan - GKRA) தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது ஆறு மாநிலங்களை சேர்ந்த 116 மாவட்டங்களில் கிராமவாசிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வாழ்வாதார வாய்ப்புகளை  வழங்கி வருகிறது. பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களின் சொந்த கிராமங்களுக்கு திரும்பிய  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் பணி முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

 

அபியான் குறிகோள்களை பின்தொடரும் வகையில் ஆறாவது வாரத்திலேயே சுமார் 17 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கி, இதுவரை ரூ. 13,240 கோடி செலவிட்டுள்ளது. ரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் கீழ் இதுவரை  62,532 நீர் பாதுகாப்பு கட்டமைப்புகள்1.74 லட்சம் ஊரக குடியிருப்புகள், 14,872 கால்நடை கொட்டகைகள், 8,963 டிவ குளங்கள்,  2,222 சமூக சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 5,909 பணிகள் மாவட்ட கனிம நிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 564 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணையதளத் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது. 16,124 விண்ணப்பதாரர்களுக்கு கிருஷி விக்யான் கேந்திரங்கள் (கே.வி.கே) மூலம் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், மற்றும் கிராமப்புற சமூகத்தினருக்கும் அதிக அளவில் பயன்களை வழங்கும்  12 அமைச்சகங்கள்/ துறைகள் மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக இதுவரை அபியானின் வெற்றியைக் காணலாம். கிராமங்களில்  தங்கியிருப்பதைத் தேர்வு செய்தவர்களுக்கு வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை வழங்கும் நீண்டகால முன்முயற்சிகளுக்கான நீண்ட கால நடவடிக்கைக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது.

 

******


(Release ID: 1643716)