புவி அறிவியல் அமைச்சகம்

குஜராத் மாநிலம், கொங்கன் மற்றும் கோவா (மும்பை உட்பட), மத்தியப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 6 வரை கனமழை பெய்யக் கூடும்

Posted On: 05 AUG 2020 6:49PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின்,   தேசிய வானிலை கணிப்பு மையம் / பிராந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

     வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டியிருக்கும் மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதிக்கு மேலே உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி சுழற்சியானது அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்காக நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும்.

     இதனால், குஜராத் மாநிலம், கொங்கன் மற்றும் கோவா (மும்பை உட்பட), மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை, பரவலாக கனமழை / மிகக் கனமழை பெய்யக் கூடும். ஒடிசா, சத்தீஷ்கர், கிழக்கு மத்தியப்பிரதேசம், மேற்கு வங்க கங்கைப் பகுதி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்யக் கூடும்.

 

*****



(Release ID: 1643712) Visitor Counter : 85