அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஃப்ளோரோசிஸ் அடிப்படையிலான நோய்களைத் தவிர்ப்பதற்காக, உபகரணங்கள் இல்லாது, ஒரு எளிய காகிதத்-துண்டு அடிப்படையிலான ஃப்ளூரைடு அயனை கண்ணால் கண்டறிதல் மற்றும் குடிநீர் அளவீட்டு ஆய்வு கருவிப் பெட்டி

Posted On: 05 AUG 2020 1:06PM by PIB Chennai

ஃப்ளோரோசிஸ் என்பது நீண்ட காலமாக குடிநீர் / உணவுப்பொருள்கள் / தொழில்துறை மாசுபடுத்திகள் மூலம் ஃப்ளூரைடை அதிகமாக உட்கொள்வதால் உடலின் கடினமான மற்றும் மென்மையான திசுக்களில் ஃப்ளூரைடுகள் சேர்வதன் விளைவாக ஏற்படும் ஒரு முடக்கும் நோயாகும். இது பல் ஃப்ளூரோசிஸ், எலும்பு ஃப்ளோரோசிஸ் மற்றும் எலும்பு அல்லாத ஃப்ளூரோசிஸ் ஆகியவை ஏற்படுகிறது. தண்ணீரில் ஃப்ளூரைடுகளை எளிதில் கண்டறிவது பொது சுகாதார அபாயங்களைத் தடுக்க உதவும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் நிறுவனத்தின் (INST) விஞ்ஞானிகள், குடிநீரில் கண்ணால் ஃப்ளூரைடு அயனை கண்டறிந்து அளவிடக் கருவி இல்லாத செயல்பாட்டை உருவாக்கியுள்ளனர். ஃப்ளோரோசிஸ் அடிப்படையிலான நோய்களைத் தவிர்க்கும் விதத்தில் வீட்டு உபயோகத்திற்காக சாமானியர்களும் இதை இயக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643489

**********



(Release ID: 1643657) Visitor Counter : 171