குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசுத் துணைத்தலைவரின் குடும்பம் நன்கொடையாக ரூ .10 லட்சம் வழங்கியது

கோவிட் -19க்கு எதிரான போராட்டம் மற்றும் அயோத்தியில் கோயில் கட்டுமான பணிக்கு தலா ரூ.5 லட்சம்

Posted On: 05 AUG 2020 3:01PM by PIB Chennai

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கய்யா நாயுடு குடும்ப உறுப்பினர்கள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு என்றும்ம் நன்கொடையாக ரூ.10 லட்சத்தை இன்று வழங்கினர்.

குடியரசுத் துணைத்தலைவரின் மனைவி திருமதி. முப்பவரபு உஷம்மா நாயுடு அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் மற்றும் அவர்களது மகன் திரு.ஹர்ஷா, மருமகள் திருமதி. ராதா முப்பவரபு, மகள் திருமதி. தீபா வெங்கட் மருமகன் திரு.வெங்கட் இம்மானி மற்றும் அவர்களது நான்கு பேரக்குழந்தைகளிடமிருந்து பங்களிப்புகளை திரட்டுவதில் முன்முயற்சி எடுத்திருந்தார்..

கோவிட்-19க்கு எதிரான போரட்டத்திற்கு ஆதரவாக பிஎம் கியர்ஸ் (PM CARES) நிதிக்காக ரூ..5 லட்சத்திற்கான காசோலையையும் மற்றும் அயோத்தியில் இன்று பூமி பூஜையுடன் தொடங்கிய ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு ஆதரவாக ராமஜென்ம பூமி தீர்த்த்கேஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான மற்றொரு காசோலையையும் திரு.நாயுடு அனுப்பினார்.

திரு.நாயுடு முன்னதாக மார்ச் மாதத்தில் தனது ஒரு மாத ஊதியத்தை பிஎம் கியர்ஸ் (PM CARES) நிதிக்கு நன்கொடையாக வழங்கி இருந்தார். மேலும், ஒவ்வொரு மாதமும் தமது மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்தை கோவிட் நோய்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

*****



(Release ID: 1643545) Visitor Counter : 166