பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

"தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித் தொகைத் திட்டங்களின் மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக" ஸ்கோச் தங்க விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றது.

Posted On: 31 JUL 2020 7:35PM by PIB Chennai

அமைச்சகத்தின் உதவித்தொகைப் பிரிவின் "தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்களின் மூலம் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக" ஸ்கோச் தங்க விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் பெற்றது

66-வது ஸ்கோச் 2020 போட்டிக்கு "டிஜிட்டல் ஆளுகையின் மூலம் கோவிட்டுக்கு இந்தியா எதிர்வினை ஆற்றுகிறது" என்று பெயரிடப்பட்டிருந்தது. டிஜிட்டல் இந்தியா, மின்-ஆளுகை 2020 போட்டியில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் கலந்து கொண்ட நிலையில், முடிவுகள் நேற்று, அதாவது 30 ஜூலை 2020, அன்று அறிவிக்கப்பட்டன. டிஜிட்டல் இந்தியா கனவுகளை அடைவதற்கும், வெளிப்படைத் தன்மை மற்றும் சேவைகளை எளிதாக வழங்குவதற்குமான இந்திய அரசின் உறுதியான செயல்பாட்டை நோக்கிய ஒரு முன்னேற்றம் இந்தத் திட்டமாகும். 'டிஜிட்டல் இந்தியா' என்னும் மிகப்பெரிய லட்சியத்தை அடைவதற்கும், மின்-ஆளுகையின் மேம்பட்ட இலக்கை எட்டுவதற்கும், அனைத்து 5 உதவித் திட்டங்களையும் நேரடிப் பலன் பரிமாற்றத் தளத்துடன், நேரடிப் பலன் பரிமாற்ற இயக்கத்தின் உதவியுடன் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இணைத்தது. மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர், திரு. அர்ஜுன் முண்டா மற்றும் இணை அமைச்சர் திருவாளர். ரேணுகா சிங் அரோரா ஆகியோர் 12 ஜூன், 2019 அன்று இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

 

2019-20-ஆம் ஆண்டில், 5 உதவித் திட்டங்களின் கீழ், நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ 2,500 கோடி அனுப்பி வைக்கப்பட்டது. இணையச் சேவைகள் மூலம் தகவல்களைப் பகிர மாநிலங்களுக்கு இந்தத் தளம் வசதியளிப்பதால், முன்மொழிதல்கள், UCக்கள் மற்றும் SOE-க்களை ஆன்லைன் மூலம் மாநிலங்கள் பதிவேற்றலாம். நிதி வெளியீட்டுக்குத் தேவைப்படும் காகிதம் சார்ந்த UC கண்காணிப்பில் இருந்து, தகவல் சார்ந்த நிதி வெளியீடு மற்றும் கண்காணிப்புச் செயல்முறைக்கான பெரும் மாற்றத்தை இது கொண்டு வந்தது. நிதி உதவி வெளியீட்டு நேரத்தை இது குறிப்பிட்ட அளவு குறைத்ததால், சேர்க்கை நடைபெற்ற அதே கல்வி ஆண்டில் உதவித் தொகையை வெளியிட தற்போது முடிகிறது. தகவல் பகுப்பாய்வு மையத்துடன் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் இணைந்துள்ளதால், மாநிலவாரியான தகவல் பகுப்பாய்வு அறிக்கைகளை அது ஆராய்ந்து தயாரிக்கிறது. இது தகவல் சார்ந்த திட்டமிடுதலுக்கு உதவுகிறது. முனைவர் பட்டம் பெறுவதற்காக அமைச்சகம் நடத்தும் ஆதரவு ஊதியத்திட்டத்தில், அனைத்து 331 பல்கலைக்கழகங்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சரிபார்க்க முடிகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள டிஜி-லாக்கருடன் இந்தத் தளம் இணைக்கப்பட்டிருப்பதால், கோப்புகள் நேரடியாக பெறப்பட்டு, சரிபார்க்கும் நேரம் மிச்சமாகிறது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001JJVN.jpg

 

 

 

***
 


(Release ID: 1642733) Visitor Counter : 231