குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கே.ஒய்.ஐ.சி மற்றும் ஐ.டி.பி.பீ இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன: காதியின் கடுகு எண்ணெய் இப்பொழுது துணை இராணுவப் பிரிவினருக்குக் கிடைக்கும்

Posted On: 31 JUL 2020 6:26PM by PIB Chennai

காதி மற்றும் கிராமத் தொழில் கமிஷன் (Khadi and Village Industries Commission - KVIC) கடுகு எண்ணெய் விநியோகிப்பதற்காக .டி.பி.பீ-யுடன் (Indo Tibetan Border Police, - ITBP) இணைந்து இந்தியாவை சுய-சார்பு நாடாக மாற்றுவதை நோக்கிய மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது.  இதற்காக இன்று கே.வி..சி மற்றும் .டி.பி.பீ இரண்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனஇந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கே.வி..சி இயக்குநர் திரு வி.கே. நாகர், மற்றும்  .டி.பி.பீ-யின் டி..ஜி திரு ராமகாந்த் ஷர்மா இருவரும் கே.வி..சி தலைவர் திரு வினய் குமார் சக்சேனா முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கே.வி..சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுயசார்பு இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா துணை இராணுவப் படைகளுக்கு உள்ளூர் பொருள்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்காரி இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். 

நாடு முழுவதும் சி.ஏ.பி.எஃப் கேண்டின்கள் மூலமாக ”சுதேசி” பொருள்களை மட்டுமே விற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளார்.  அனைத்து துணை இராணுவப் படைகளுக்கும் தேவையான பொருள்களை வாங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் .டி.பி.பீ-யை ஒருங்கிணைப்பு நிறுவனமாக நியமித்து உள்ளது.

.டி.பி.பீ விரைவில் அதிகத் தரத்திலான 1200 குவிண்டால் கட்சிகானி கடுகு எண்ணெய் விநியோகிப்பதற்கான கொள்முதல் ஆணையை வழங்க உள்ளது. இதனை ஒரு மாத காலத்திற்குள் தனது பி.எம்..ஜி.பி (Prime Minister Employment Generation Programme) தொழில் பிரிவுகள் மூலம் கே.வி..சி விநியோகிக்கும்.

கே.வி..சி தலைவர் திரு வினய் குமார் சக்சேனா இந்த முன்னெடுப்பு நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு முதல் முறையாக கே.வி..சி துணை இராணுவப் படைகளுக்காக பொருளை விநியோகிக்க இருக்கின்ற இந்த நடவடிக்கை வரலாற்று ரீதியில் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்இந்தக் கடினமான காலகட்டத்தில் இத்தகைய நடவடிக்கையானது நிலையான உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நமது எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற நமது வீரர்களுக்கு தரமான எண்ணெயை வழங்குவது அதிலும் தேவைப்படும் சரியான நேரத்தில் வழங்குவது எங்களுடைய முன்னுரிமைச் செயலாகும் என்று சக்சேனா தெரிவித்தார். 

கே.வி.ஐ.சி மற்றும் .டி.பி.பீ ஆகியன ஓராண்டு காலத்துக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனகால அளவு மேலும் நீட்டிக்கப்படலாம்இதனைத் தொடர்ந்து பருத்தித் தரைவிரிப்புகள் (தரி), போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஊறுகாய், தேன், அப்பளம், அழகு சாதனப் பொருள்கள் முதலான பொருள்களை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறதுஎண்ணெய் மற்றும் தரை விரிப்புகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அண்மையில் கே.வி..சி பழங்குடியினர் பகுதியில் உள்ள சி..பி.எஃப் கேண்டீன்களுக்கு தேன், ஊறுகாய், சமையல் எண்ணெய், அகர்வத்தி, அப்பளம், இனிப்பு சேர்க்கப்பட்ட நெல்லிக்காய், பருத்தித் துண்டுகள் முதலானவற்றை விநியோகித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மேலும் கூடுதலாக விநியோகிப்பதற்காக 63 பொருள்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.



(Release ID: 1642721) Visitor Counter : 187


Read this release in: English , Marathi , Hindi , Manipuri